வீனின் இடப்பெயர்ச்சி விதி

testwiki இலிருந்து
imported>Dineshkumar Ponnusamy பயனரால் செய்யப்பட்ட 22:47, 7 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ((edited with ProveIt))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பல்வேறு தனி வெப்பநிலைகளில் கரும்பொருள் வெப்பக் கதிர்வீசலின் செறிவுக்கும், அலைநீளத்துக்குமான தொடர்பு.

வீனின் இடப்பெயர்ச்சி விதி (Wien's displacement law) கரும்பொருள் ஒன்றில் இருந்து எந்த வெப்பநிலையிலும் வெளியேறும் வெப்பக் கதிர்வீசலின் அதிக ஆற்றல் கொண்ட அலைநீளம் அதனுடைய தனிவெப்பநிலை T க்கு எதிர் மாறு விகிதத்தில் இருக்கும் எனப் பகருகிறது. வெப்பவியக்கவியல் அடிப்படையில் இவ்விதியை 1893 ஆம் ஆண்டில் நிறுவிய வில்லெம் வீன் என்பவரின் பெயரில் இவ்விதி அழைக்கப்படுகிறது.

λmaxT=b,

இங்கு,

λmax - உயர் அலைநீளம்,
T - கரும்பொருளின் தனி வெப்பநிலை,
b = வார்ப்புரு:Val, விகித மாறிலி, அல்லது வீனின் இடப்பெயர்ச்சி மாறிலி என அழைக்கப்படுகிறது.[1]

கட்புலனாகும் நிறமாலைக்குக் கிட்டவாக உள்ள அலைநீளங்களுக்கு, மீட்டர் அளவுக்குப் பதிலாக நானோமீட்டர் அளவு பயன்படுத்தப்படுகிறது. இங்கு, வார்ப்புரு:Nowrap ஆகும்.

பிளாசுமா வெப்பநிலைகளில் இலத்திரன்வோல்ட் அலகு பயன்படுத்தப்படுகிறது. இங்கு விகித மாறிலி வார்ப்புரு:Nowrap ஆகும்.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist