பாயில் வெப்பநிலை

testwiki இலிருந்து
imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 19:05, 14 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வெப்பவியக்கவியலில், பாயில் வெப்பநிலை (Boyle temperature) என்பது நல்லியல்பற்ற வளிமம் ஒன்று இலட்சிய வளிமமாகத் தொழிற்படும் போது அதன் வெப்பநிலை ஆகும். அழுத்தக் காரணி (compressibility factor) Z, 1 ஆக இருக்கும் போது, பாயில் வெப்பநிலை Tb பின்வருமாறு தரப்படும்:

Tb=aRb

சாதாரண வளிமங்கள் பாயில் விதிப்படி செயல்படுவதில்லை. வெப்பநிலை மாறாது இருக்கும் போது ஒரு வளிமத்தின் கன அளவு அதன் அழுத்தத்திற்கு எதிர்விகிதத்தில் இருக்கும் என்பது பாயில் விதியாகும். இவ்விதியிலிருந்து வளிமங்கள் சிறிது மாறுபடுகின்றன. ஆனால் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒவ்வொரு வளிமமும் பாயில் விதிப்படிச் செயல்படுகின்றன. இந்த வெப்பநிலையே பாயில் வெப்பநிலை ஆகும்.

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=பாயில்_வெப்பநிலை&oldid=886" இலிருந்து மீள்விக்கப்பட்டது