ஏற்பு குணக எண்

testwiki இலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 08:05, 13 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

எக்சு மற்றும் காமாக் கதிர்கள் ஒரு ஊடகத்தின் வழியாக செல்லும் போது அதன் ஒரு பகுதி ஊடகத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒருபகுதி ஊடுருவிச் செல்கிறது. இது ஊடகத்தினையும் கதிரின் அலைநீளத்தையும் பொறுத்திருக்கிறது. ஊடகத்தின் வழியாகச் சென்று வெளிப்படும் கதிரின் செறிவு I என்றும் அக்கதிரின் ஆரம்பச் செறிவு I0 என்றும் கொண்டால்:

I=I0eμx,[1][2][3]

μ என்பது ஏற்பு குணக எண் (Linear Absorption coefficient ) ஆகும். x என்பது ஊடகத்தின் தடிமனளவாகும். இது செறிவு குறைதல் குணக எண் (Linear Attenuation coeffficient) என்றும் அறியப்படும். x செ.மீட்டரில் அளவிடப்பட வேண்டும். μ என்பதின் அலகு /செ.மீ. அல்லது செ.மீ.−1.ஆகும்.

ஓர் எளிய எடுத்துக்காட்டு மூலம் விளங்கிக்கொள்ளமுடியும்.2000 எக்சு கதிர் ஒளியன்கள் ஒரு சென்டி மீட்டர் கனமுடைய ஊடகம் வழி சென்று 1000 ஒளியன்கள் மட்டுமே வெளிப்படுவதாகக் கொள்வோம்.மேலே சுட்டிய சமன்பாட்டின் படி ,ஏற்புக் குணக எண்ணின் மதிப்பு 0.693/ செ.மீ என்றாகிறது

சில நேரங்களில் ஏற்புக் குணக எண்ணினை நீளத்திற்கு இவ்வளவு என்பதனைவிட, அலகு பரப்பிற்கு இவ்வளவு கிராம் என்று கொடுப்பது விரும்பப் படுகிறது. ஏற்கும் பொருளின் மொத்த நிறையினைவிட அலகுபரப்பின் நிறையினை இது குறிக்கிறது. gm/cm2. பரப்பு-நிறை (area mass) என்பது ஒரு அலகு பரப்பின் மேல் உள்ள ஒரு கிராம் நிறையாகும்.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=ஏற்பு_குணக_எண்&oldid=896" இலிருந்து மீள்விக்கப்பட்டது