கிளீசு 667
வார்ப்புரு:Starbox begin வார்ப்புரு:Starbox image வார்ப்புரு:Starbox observe வார்ப்புரு:Starbox character வார்ப்புரு:Starbox astrometry வார்ப்புரு:Starbox detail வார்ப்புரு:Starbox reference வார்ப்புரு:Starbox end கிளீசு 667 (Gliese 667) என்பது விருச்சிக விண்மீன் குழாத்திலுள்ள ஒரு மும்மடி- விண்மீன் தொகுதி ஆகும்.இதிலுள்ள விண்மீன்கள் மூன்றும் சூரியனை விட அதிக குறைவான திணிவு (நிறை) உடையது.இது புவியிலிருந்து 6.8 புடைநொடி (22.1 ஒளியாண்டுகள்) தூரத்தில் உள்ளது.இது மற்ற எந்த விண்மீனாலும் ஈர்ப்பு விசையால் கட்டுப்படுத்தப் படவில்லை.வெறும் கண்களால் காணும் போது இந்த விண்மீன் தொகுதி ஒரே வீண்மீன் போல தோன்றும் , பார்ப்பதற்கு மங்கலான விண்மீன் போல இருக்கும்.இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 5.89 ஆகும்.
வீண்மீன் தொகுதி
கிளீசு 667 வீண்மீன் தொகுதியிலுள்ள மூன்று வீண்மீன்களில் கிளீசு 667 எ மற்றும் கிளீசு 667 பி அகிய இரண்டும் பிரகாசமான வீண்மீன்கள் ஆகும்.இந்த இரண்டு வீண்மீன்களுக்கும் இடையில் உள்ள கோணத் தொலைவு 1.81 பாகைத்துளிகள்.இதன் சுற்றுப்பாதையின் வட்டவிலகல் 0.58. இந்த இரண்டு வீண்மீன்களுக்கும் இடைப்பட்ட தூரம் சராசரியாக 12.6 வானியல் அலகுகள் (தோரயமாக சூரியனுக்கும் புவிக்கும் இடையில் உள்ள தூரத்தைப் போல 13 மடங்கு). இதன் சுற்றுப்பாதையின் வட்டவிலகல்கள் காரணமாக இந்த இரண்டு வீண்மீன்களுக்கும் 5 வானியல் அலகுகள் தூரம் வரை அருகிலும், 20 வானியல் அலகுகள் வரை விலகியும் செல்கிறது.[note 1][1]
இந்த விண்மீன் தொகுதியில், மூன்றாவது வீண்மீன், கிளீசு 667 சி,இது கிளீசு 667 எபி ஜோடியை, 30 சுற்றுப்பாதையின் வட்டவிலகலில் சுற்றி வருகிறது. விண்மீன் தொகுதிக்கும் விண்மீனுக்கும் இடைப்பட்ட சராசரி தூரம் 230 வானியல் அலகுகள்.[2][3]
கிளீசு 667 எ
கிளீசு 667 எ, கிளீசு 667 வீண்மீன் தொகுதியிலுள்ள மிகப் பெரிய விண்மீன் ஆகும்.இது K-வகை முதன்மைத் தொடர் விண்மீன்(K-type main-sequence star) ஆகும்.இதன் விண்மீன் வகைப்பாடு K3V.[4].இது சூரியயனைப் போல 73% திணிவையும்(நிறை)[5], 76%[4] ஆரத்தையும் உடையது.ஆனால் சூரியனை ஒப்பிடுகையில் 12-13% கதிர் ஒளியை மட்டுமே வீசுகிறது. இதில் சூரியனைப் போல ஹைட்ரஜன் மற்றும் ஈலியம் போன்ற தனிமங்கள் இல்லை[6], அதற்கு பதிலாக வேறு தனிமங்கள் இருப்பதாக கருதுகிறார்கள்.இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 6.29 ஆகும்.
கிளீசு 667 பி
கிளீசு 667 எ வைப் போன்று கிளீசு 667 பி யும் K-வகை முதன்மைத் தொடர் விண்மீன்(K-type main-sequence star) ஆகும்.இதன் விண்மீன் வகைப்பாடு K5V.இது சூரியனைப் போல 69%[5] திணிவு(நிறை)உடையது.ஆனால் சூரியனை ஒப்பிடுகையில் 5% கதிர் ஒளியை மட்டுமே வீசுகிறது.இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 7.24 ஆகும்.
கிளீசு 667 சி
கிளீசு 667 சி, கிளீசு 667 வீண்மீன் தொகுதியிலுள்ள மிகப் சிறிய விண்மீன் ஆகும். இதன் விண்மீன் வகைப்பாடு M1.5.இது சூரியனைப் போல 31%[5] திணிவையும்(நிறை), 42%[4] ஆரத்தையும் உடையது.ஆனால் சூரியனை ஒப்பிடுகையில் 1.4% கதிர் ஒளியை மட்டுமே வீசுகிறது. இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 10.25 ஆகும்.இது M-வகை விண்மீன் ஆகும்.[7] இதற்கு 5 கோள்கள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது, 7 கோள்கள் வரை இருக்க வாய்ப்புள்ளது.
கோள்கள் தொகுதி
கிளீசு 667 சிபி, கிளீசு 667 சிசி, கிளீசு 667 சிஇ, கிளீசு 667 சிஃப் மற்றும் கிளீசு 667 சிடி என 5 புறக்கோள்கள் கிளீசு 667 C யை சுற்றி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் கிளீசு 667 சிஜி மற்றும் கிளீசு 667 சிகச் ஆகிய இரண்டு புறக்கோள்கள் உறுதி செய்யப்படவில்லை.


வார்ப்புரு:OrbitboxPlanet begin வார்ப்புரு:OrbitboxPlanet வார்ப்புரு:OrbitboxPlanet hypothetical வார்ப்புரு:OrbitboxPlanet வார்ப்புரு:OrbitboxPlanet வார்ப்புரு:OrbitboxPlanet வார்ப்புரு:OrbitboxPlanet வார்ப்புரு:OrbitboxPlanet வார்ப்புரு:Orbitbox endவார்ப்புரு:-
மேற்கோள்கள்
குறிப்புகள்
பிழை காட்டு: <ref> tags exist for a group named "note", but no corresponding <references group="note"/> tag was found
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;arxiv12020446என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;Gregoryஎன்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ 4.0 4.1 4.2 பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;aaa367_521என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ 5.0 5.1 5.2 பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;mnras389_2_925என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;aaa373_159என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;csiroஎன்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை