அபி எண்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search
மேலேயுள்ள வரைபடம் SF-11 என்ற ஃபிளிண்ட் கண்ணாடியால் ஆனது, நடுவிலுள்ள வரைபடம் BK-7 என்ற போரோசிலிக்கேட் கண்ணாடியால் ஆனது, புள்ளி கோடுள்ள வரைபடம் SF-11 என்ற குவார்ட்சு கண்ணாடியால் ஆனது. இப்படம் ஒளிவிலகல் எண்ணில் ஏற்படும் மாற்றத்தை குறிக்கிறது.

அபி எண் (Abbe number) ஒளியியலில் வில்லைகளை வடிவமைக்கப் பயன்படுகிறது. ஒளிபுகு பண்பு (Transparency) கொண்ட பொருட்களின் V-எண் எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வெண் நிறப்பிரிகைத் திறனின் அளவீடாகும் (அலை நீளம் மற்றும் ஒளிவிலகல் எண் இடையே இது அயக்கப்படுகிறது). V-எண்ணின் அளவு அதிகரிக்கும் போது நிறப்பிரிகைத் திறன் குறைகிறது. செர்மனியைச் சேர்ந்த இயற்பியலாளர் எனெச்ட் அபி (Ernst Abbe) பெயரால் இவ்வெண் அழைக்கப்படுகிறது.

ஒரு பொருளின் அபி எண் என்பது,[1][2] VD,

VD=nD1nFnC,

இதில் nD, nF and nC என்பது முறையே D-, F- மற்றும் C- பிரான்ஃகோபர் கோடுகளின் ஒளிவிலகல் எண்கள் ஆகும். (அந்த அலைநீளங்கள் முறையே 589.3 nm, 486.1 nm and 656.3 nm ஆகும்). அபி எண், ஒளியின் நிறத்தரத்திற்கு (chromaticity) ஏற்ப ஒளியியற் பொருட்களையும், கண்ணாடிகளை வகைப்படுத்தவும் பயன்படுகிறது. அதிக நிறப்பிரிகைக் கொண்ட தீக்கல் கண்ணாடி V < 55 என்ற அபி எண்ணும், குறைந்த நிறப்பிரிகைக் கொண்ட கிரௌன் கண்ணாடி அதிக அபி எண்ணைக் கொண்டுள்ளது. மிகவும் அடர்த்தியான ஃபிளிண்ட் கண்ணாடி கூட 25 க்கு கீழே அபி எண்ணை பெற்றுள்ளது. பாலிகார்பனேட் நெகிழியால் ஆன பொருட்களின் அபி எண் 34 ஆகவும், பொதுவான கிரௌன் கண்ணாடிகள் 65 என்ற அபி எண்ணையும் பெற்றுள்ளது. புளோரைட் மற்றும் பாசுபைட்டால் ஆன கிரௌன் கண்ணாடிகளின் அபி எண் 75 முதல் 85 வரை இருக்கும்.

மனிதக் கண்ணின் உணர்வுதிறன்மிக்க அலைநீளங்களின் வரைபடம், இதில் அபி எண் அடைப்புக் குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது. மேற்கோள் அலைநீளங்கள் 486.1 nm (நீலம்) and 656.3 nm (சிவப்பு)

நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லைகளை உருவாக்க அபி எண்கள் பயன்படுகிறது. அவற்றின் தலைகீழி நிறப்பிரிகை ஆகும். அலைநீளப் பகுதியில் மனிதக் கண்ணின் உணர்வுதிறன்மிக்கப் பகுதி காட்டப்பட்டுள்ளது. (பார்க்க: வரைபடம்)

அபி வரைபடம்

ஒரு அபி வரைபடம், பலதரப்பட்ட கண்ணாடிகளுக்கு அபி எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தெடுக்கப்பட்ட கண்ணாடியின் அபி எண் மற்றும் அதன் ஒப்பீடு.[3]

அபிவரைபடம் என்பது, அபி எண் ஒரு அச்சிலும் Vd, ஒளிவிலகல் எண் ஒரு அச்சிலும் nd வரையப்பட்டுள்ளது. பலதரப்பட்ட கண்ணாடிகளுக்கு வரைபடத்தில் தேர்தெடுக்கப்பட்டப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

கண்ணாடிகளின் அபி எண் என்பது அவற்றின் சராசரி ஒளிவிலகல் எண்களுடன் ஒளிவிலகல் திறனை கண்டறிந்து, நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லைகளை உருவாக்கப் பயன்படுகிறது.[4]

F- மற்றும் C- பிரான்ஃகோபர் கோடுகளின் ஒளிவிலகல் எண் மாற்றங்கள், ஒரு சமன்பாட்டில் வழங்கப்பட்டுள்ளது.

Ve=ne1nFnC

காட்மியத்தின் நீலம் மற்றும் சிவப்பு வரிகளுக்கிடையேயான ஒளிவிலகல் எண்களின் வித்தியாசம் (அதன் அலைநீளங்கள் முறையே 480.0 nm and 643.8 nm) பாதரச e-வரியுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. ( ne அதன் அலைநீளம் 546.073 nm).[5]

λ நானோமீட்டரில் பிரான்ஃகோபர் கோடுகள் ஒளி மூலங்கள் நிறங்கள்
365.01 i Hg புற ஊதாக் கதிர்
404.66 h Hg ஊதா
435.84 g Hg நீலம்
479.99 F' Cd நீலம்
486.13 F H நீலம்
546.07 e Hg பச்சை
587.56 d He மஞ்சள்
589.3 D Na மஞ்சள்
643.85 C' Cd சிவப்பு
656.27 C H சிவப்பு
706.52 r He சிவப்பு
768.2 A' K IR-A
852.11 s Cs IR-A
1013.98 t Hg IR-A

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வெளியிணைப்புகள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=அபி_எண்&oldid=1383" இலிருந்து மீள்விக்கப்பட்டது