அயோடோசிலேன்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

அயோடோசிலேன் (Iodosilane) சிலிக்கான், ஐதரசன், மற்றும் அயோடின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். அயோடோசிலேன் -157 °செல்சியசு வெப்பநிலையில் P21/c என்ற இடக்குழுவுடன் ஒற்றை சரிவச்சில் நிறமற்ற படிகங்களாக உருவாகிறது.

தயாரிப்பு

மோனோசிலேனும் அயோடினும் வினைபுரியும்போது முதல் விளைபொருளாக அயோடோசிலேன் உருவாகிறது. இதைத் தவிர டை, டிரை- மற்றும் இறுதியாக டெட்ரா அயோடோசிலேன் (சிலிக்கான் டெட்ரா அயோடைடு) போன்ற சேர்மங்களையும் உருவாக முடியும்.

ஐதரசன் அயோடைடுட்ன் பீனைல்சிலேன் அல்லது குளோரோபீனைல்சிலேன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாகவும் அயோடோசிலேனை உற்பத்தி செய்யலாம்.[1]

ClC6H4SiH3+HIC6H5Cl+SiH3I

பண்புகள்

குறைந்த வெப்பநிலையில், அயோடோசிலேன் விரைவாக [Co(CO)4] உடன் வினைபுரிந்து SiH3Co(CO)4 சேர்மத்தை உருவாக்குகிறது.[2]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

மேலும் வாசிக்க

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=அயோடோசிலேன்&oldid=1660" இலிருந்து மீள்விக்கப்பட்டது