இருமெத்தில் மலோனேட்டு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

இருமெத்தில் மலோனேட்டு (Dimethyl malonate) என்பது C5H8O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பார்பிட்டூரிக் அமிலம் போன்ற கரிமச் சேர்மங்களைத் தயாரிக்க உதவும் பொது வினையாக்கியாக இது பயன்படுகிறது. மலோனிக் அமிலத்தின் ஈரெசுத்தர் வழிப்பெறுதியான இருமெத்தில் மலோனேட்டு மலோனிக் எசுத்தர் தயாரிப்பில் பயன்படுகிறது. இருமெத்தாக்சிமெத்தேனையும் கார்பனோராக்சைடையும் சேர்த்து வினைபுரியச் செய்வதால் இருமெத்தில் மலோனேட்டு உருவாகிறது.

H2C(OCH3)2+2 COCH2(CO2CH3)2

இருமெத்தில் மலோனேட்டு வாசனைத் தொழிலில் இயாசுமோனேட்டுகளின் தொகுப்பில் ஒரு மூலப்பொருளாக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மெத்தில் ஈரைதரோயாசுமோனேட்டு தயாரிப்பு இதற்கு உதாரணமாகும். வளைய பெண்டனோன், பெண்டனால் இருமெத்தில் மலோனேட்டு ஆகிய மூன்றும் இத்தயாரிப்பில் பயன்படுகின்றன.[1] எடியோன் கிட்டத்தட்ட அனைத்து நல்ல வாசனை திரவியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு வரை, பிர்மெனிச்சு நிறுவனத்தின் அதிக விற்பனையான சேர்மமாக எடியோன் இருந்தது.[2]

எபெய் செங்சின் நிறுவனம் இருமெத்தில் மலோனேட்டின் கனஅளவு அடிப்படையில் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராகும். மேலும் இந்நிறுவனம் 1940 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட குளோரோ அசிடிக் அமிலம் / சோடியம் சயனைடு செயல்முறையைப் பயன்படுத்துகிறது.[3]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist