எதிர்திசைசெலுத்தல்
எதிர்த்திசைசெலுத்தல் (Countersteering)என்பது மிதிவண்டி, விசையுந்து போன்ற ஒற்றைத் தட வண்டிகளின் ஓட்டுனர்கள், வளைவுகளில் திரும்பத் துவங்கும்போது, வண்டியைக் கணநேரம் திரும்ப வேண்டிய திசைக்கு எதிராக செலுத்துவதைக் குறிக்கும். ("இடது புறம் செல்ல வலது புறம் செலுத்துவது"). ஒரு வளைவை வெற்றிகரமாகக் கையாள்வதற்கு, ஓட்டுனர் மற்றும் வண்டியின் கூட்டு நிறை மையம், முதலில் வளைய வேண்டிய திசைக்கு சாய்க்கப்பட வேண்டும். துளிநேரம் எதிர்த்திசையில் வண்டியைச் செலுத்துவது இச்சாய்வை அளிக்கிறது.[1] ஓட்டுனரின் எதிர்திசைசெலுத்தும் செயலை சிலபோது "செலுத்துக் கட்டளை வழங்கல்" ("giving a steering command") என்றும் கூறுவர்.[2][3]
எந்த அறிவியல் இலக்கியத்திலும் எதிர்திசைசெலுத்தல் பற்றித் தெளிவான விளக்கம் இல்லை. திசைசெலுத்த முறுக்கு விசைக்கும் திசைசெலுத்த கோணத்திற்குமே பெரும்பாலும் வேறுபாடு கருதப்படுவதில்லை.[4]

எவ்வாறு செயல்படுகிறது

இடது புறம் திரும்ப எதிர்திசைசெலுத்தும்போது பின்வருபவை நிகழ்கின்றன:[5][6]
- கைப்பிடி பட்டியின் வலது புறத்தில் ஒரு முறுக்குவிசை தரப்படும்.
- முன்சக்கரம் திருப்ப அச்சின் வலது புறம் சுழல, வட்டகை தரையைத் தொட்டுக்கொண்டிருக்கும் வலதுபுற பகுதியில் விசைகளை உருவாக்கும்.
- வண்டி முழுதுமாக வலப்புறம் திரும்பும்
- தரையைத் தொட்டிருக்கும் பகுதியில் உண்டான விசைகள் சக்கரங்களை "அடியிலிருந்து வெளிப்புறமாக" வண்டியை வலப்புறம் இழுத்து அதனை இடப்புறம் சாயச் செய்யும்.
- வண்டியைச் செலுத்துபவரோ, அல்லது பெரும்பாலான சமயங்களில், வண்டியின் இயற்கையான நிலைத்தன்மையோ, முன்சக்கரத்தை இடது புறம் திருப்ப வேண்டியை செலுத்த முறுக்குவிசையை வழங்கி விரும்பிய திசையில் வண்டியைச் செலுத்தும்.
- வண்டி, இடது புறம் திரும்பத் துவங்கும்.
இது ஒரு சிக்கலான அசைவுக் கோவையாகத் தோன்றினாலும், மிதிவண்டியைச் செலுத்தும் ஒவ்வொரு குழந்தையும் இதனை இளகுவாகச் செய்கின்றது. பெரும்பாலான ஓட்டுனர்களும் இச்செயல் கோவையைப் பெரிதும் கவனிப்பதில்லை, ஆகையால் அவர்கள் தம் வண்டியை அவ்வாறு செலுத்துவதில்லை என்று உறுதி கூறுவர்.[6]
சாய்வைத் தூண்டும் ஆரம்ப திருப்ப முறுக்குவிசையை, வளைவிலிருந்து வெளியேறும் வரை ஆரத்தையும் சாய் கோணத்தையும் சீராக வைக்கத் தேவைப்படும், நீடித்த திருப்ப முறுக்கு விசை மற்றும் திருப்பக் கோணம் ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்துவது அவசியம்.
- ஆரம்ப திருப்ப முறுக்குவிசையும் கோணமும் திரும்ப வேண்டிய திசைக்கு மாறாக இருக்கும்.
- நீடித்த திருப்பக்கோணம் வளைய வேண்டிய திசையிலேயே அமையும்.
- திருப்பக்கோணத்தைச் சீராக வைக்கத் தேவைப்படும், நீடித்த திருப்ப முறுக்குவிசையானது வண்டியின் முன்னோக்கிய வேகம், வண்டியின் வடிவியல், வண்டி மற்றும் ஓட்டுனரின் கூட்டான நிறை பரவல் ஆகியவற்றைப் பொருத்து திரும்ப வேண்டிய திசையிலோ, மாறான திசையிலோ அமையும்.[7]
வளைப்பதற்குச் சாய்க்கவும்
ஒரு வண்டி மற்றும் அதன் ஓட்டுனரின் கூட்டு நிறைமையம் வேகத்திற்கும் வளைவு ஆரத்திற்கும் ஏற்ற கோணத்தில் வளைவின் உட்பக்கம் சாய்ந்தால் மட்டுமே, வண்டியால் ஒரு வளைவைச் சரியாக சமாளிக்க முடியும்:
இதில் என்பது முன்னோக்கிய வேகம், என்பது வளைவின் ஆரம் மற்றும் என்பது ஈர்ப்பு விசை முடுக்கம்[8]
அதிக வேகத்திலும் குறுகிய வளைவுகளிலும் சாய்கோணம் பெரிதாக இருக்க வேண்டும். முதலில் வளைவினுள் பக்கமாக நிறைகனத்தைச் சாய்க்காதிருந்தால், வண்டி மற்றும் சவாரி செய்வோருக்குக் கீழே வட்டகை வளைவோடு இழுத்துச் சென்றாலும், அவர்களது நிலைமம் தொடர்ந்து அவர்களை நேர் கோட்டிலே கொண்டு செல்லும். நேர் கோட்டில் செல்வதிலிருந்து வளைவைச் சமாளிக்கத் தேவையான மாற்றம் வண்டியை வளிவினுள் சாய்க்கும் செய்முறையே. ஆதாரப் புள்ளிகளை முதலில் எதிர் திசையில் நகர்த்துவதே நடைமுறையில் இச்சாய்வை நிகழ்த்து வழி.[9]
இவற்றையும் காண்க
குறிப்புகள்
சான்றாதாரங்கள்
- Vittore Cossalter; R. Lot; M. Peretto (2007). Steady turning of motorcycles. Journal of Automobile Engineering. 221 Part D. doi:10.1243/09544070jauto322. ISBN 978-1-4303-0861-4. (subscription required)
- Leif Klyve; Henry Enoksen; Gunnar Kubberød (2006). "Full Control"/"Full Kontroll" வார்ப்புரு:Webarchive (PDF). Norwegian Motorcycle Union. ISBN 82-92276-00-9.
வெளி இணைப்புகள்
- Balance and Steering வார்ப்புரு:Webarchive, by Tony Foale
- Full Control (English version) வார்ப்புரு:Webarchive, by Norwegian Motorcycle Union
- "No B.S. Machine" வார்ப்புரு:Webarchive physical experimentation
- "The Physics of Unicycling" 5 minutes, explains countersteering from fundamental physics principles, requires Adobe Flash
- ↑ Sheldon Brown.
- ↑ "Curriculum for driving licenses A1, A2 and A"/"Læreplan Førerkortklasse A1, A2 and A" வார்ப்புரு:Webarchive (PDF).
- ↑ Leif Klyve; Henry Enoksen; Gunnar Kubberød.
- ↑ Sharp, R. S. (2008).
- ↑ Jones, David (1970).
- ↑ 6.0 6.1 "More on countersteering", Cycle World, October 1985: 71,
[A] motorcycle has to lean to turn, and countersteering to the left steers the front wheel out from under the motorcycle, causing the motorcycle to lean to the right.
- ↑ V. Cossalter p. 1343-1356: "Correlations with the subjective opinions of expert test riders have shown that a low torque effort should be applied to the handlebar in order to have a good feeling, and preferably in a sense opposite to the turning direction."
- ↑ Fajans, Joel (July 2000).
- ↑ வார்ப்புரு:Cite book