சீரியம்(IV) புளோரைடு
சீரியம்(IV) புளோரைடு (Cerium(IV) fluoride) என்பது CeF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளை நிறத்தில் ஒரு படிகப்பொருளாகத் தோன்றும் சீரியம்(IV) புளோரைடு ஒரு வலுவான ஆக்சிஜனேற்றியாகும். நீரிலியாகவும் ஒற்றை நீரேற்றாகவும் இரண்டு வடிவங்களில் இச்சேர்மம் காணப்படுகிறது.[1] சீரியம் டெட்ராபுளோரைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.
தயாரிப்பு
சீரியம்(III) புளோரைடு அல்லது சீரியம் ஈராக்சைடை 500 பாகை செல்சியசு வெப்பநிலையில் புளோரின் வாயுவைப் பயன்படுத்தி புளோரினேற்றம் செய்து சீரியம்(IV) புளோரைடு தயாரிக்கப்படுகிறது.[2]
CeF4·xH2O, x≤1 என்ற இதனுடைய நீரேற்று வடிவத்தை 40% ஐதரோபுளோரிக் அமிலத்தை சீரியம்(IV) சல்பேட்டு கரைசலுடன் சேர்த்து 90 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து தயாரிக்கலாம்.[3]
பண்புகள்
இருமெத்தில் சல்பாக்சைடில் சீரியம்(IV) புளோரைடு கரைந்து [CeF4(DMSO)2] என்ற ஒருங்கிணைவுச் சேர்மம் உருவாகிறது.[3]
வேற்கோள்கள்
வார்ப்புரு:Reflist வார்ப்புரு:சீரியம் சேர்மங்கள்
- ↑ 无机化学丛书 第七卷 钪 稀土元素 (Series of Inorganic Chemistry. Vol. 7. Scandium. Rare Earth Elements.). Science Press. pp 244-246. 1. Compounds of Halogens. (in Chinese)
- ↑ Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band I, Ferdinand Enke, Stuttgart 1975, வார்ப்புரு:ISBN, S. 256.
- ↑ 3.0 3.1 வார்ப்புரு:Cite journal