டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு
வார்ப்புரு:Chembox டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு (Dysprosium(III) nitrate) என்பது Dy(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டிசிப்ரோசியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. மஞ்சள் நிறப் படிகங்களாகவும் படிக நீரேற்றாகவும் தோன்றும் இச்சேர்மம் நீரில் கரையும்.[1]
தயாரிப்பு
நைட்ரசன் ஈராக்சைடுடன் டிசிப்ரோசியம்(III) ஆக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு உருவாகிறது:[2]
நைட்ரசன் ஈராக்சைடு நேரடியாக டிசிப்ரோசியம் உலோகத்துடன் வினைபுரிந்தாலும் டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு கிடைக்கும்:
இயற்பியல் பண்புகள்
மஞ்சள் நிறப் படிகங்களாக டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு உருவாகிறது:[3]
என்ற இயைபுடன் படிக நீரேற்றாக இச்சேர்மம் படிகமாகும். 88.6 செல்சியசு வெப்பநிலையில் இதன் படிகநீரில் டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு உருகத் தொடங்கும்.[4][5]
நீர் மற்றும் எத்தனால் கரைசல்களில் கரையும். டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு நீர் உறிஞ்சும் திறன் கொண்டதாகவும் உள்ளது.
வேதிப் பண்புகள்
நீரேற்று டிசிப்ரோசியம் நைட்ரேட்டு வெப்பவியல் கோட்பாடுகளின்படி சிதைவுக்கு உள்ளாகி உருவாகிறது. மேலும் சூடுபடுத்தினால் டிசிப்ரோசியம் ஆக்சைடைக் கொடுக்கிறது.
பயன்
ஒரு வினையூக்கியாக டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
வார்ப்புரு:Reflist வார்ப்புரு:டிசிப்ரோசியம் சேர்மங்கள் வார்ப்புரு:நைத்திரேட்டுகள்