துத்தநாக லாக்டேட்டு
வார்ப்புரு:Chembox. துத்தநாக லாக்டேட்டு (Zinc lactate) என்பது Zn(C3H5O3)2.[1][2] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
தயாரிப்பு
துத்தநாகமும் லாக்டிக் அமிலமும் வினைபுரிந்து இச்சேர்மம் உருவாகிறது:
இயற்பியல் பண்புகள்
துத்தநாக லாக்டேட்டு வெண்மை நிறப் படிகங்களாக கிட்டத்தட்ட தூளாகத் தோன்றுகிறது. நெடியற்றதாகவும் தண்ணீரில் நன்றாகக் கரையக்கூடியதாகவும் உள்ளது:[3] எத்தனால் கரைப்பானில் இது கரையாது. Zn(C3H5O3)2 · 2H2O என்ற வாய்ப்பாடு கொண்ட இருநீரேற்றுகளாக இது உருவாகிறது.
பயன்கள்
பற்பசை அல்லது வாய்கழுவி போன்ற பல் பராமரிப்பு தயாரிப்புகளில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது:[4]
உணவுப் பொருளாகவும், ஊட்டச் சத்துப் பொருளாகவும் பயன்படுத்தலாம்:[5]
பாலூட்டிகளில் ஆக்சிசனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளதாகவும் குடல் செயல்பாட்டை மேம்படுத்தும் பொருளாகவும் பயன்படுகிறது:[6]