நியோடிமியம் டங்சுடேட்டு
நியோடிமியம் டங்சுடேட்டு (Neodymium tungstate) Nd2(WO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிமச் சேர்மமாகும். நியோடிமியமும் டங்சுடிக் அமிலமும் சேர்ந்து நியோடிமியம் டங்சுடேட்டு என்ற இந்த உப்பு உருவாகிறது. நீரேற்றப்பட்ட வெளிர் ஊதா நிற படிகங்களான இச்சேர்மம் தண்ணீரில் சிறிதளவு கரைகிறது.
தயாரிப்பு
- நியோடிமியம்(III) ஆக்சைடு உடன் தங்குதன்(VI) ஆக்சைடு வினைபுரிந்து நீரற்ற நியோடிமியம் டங்சுடேட்டு உருவாகிறது:
- சோடியம் டங்சுடேட்டுடன் நியோடிமியம் நைட்ரேட்டு வினைபுரியும்போது இச்சேர்மத்தின் ஒன்பது நீரேற்று உருவாகிறது
பண்புகள்
நியோடிமியம் டங்சுடேட்டு ஒற்றைச் சரிவு படிக அமைப்பில் படிகத்தை உருவாக்குகிறது. இடக்குழு A 2/a, லட்டு மாறிலிகள் a = 1.151 nm, b = 1.159 nm, c = 0.775 nm மற்றும் β = 109.67 °.என்பவை இதன் அடையாள ஆள்கூறுகளாகும்.[1] எத்தனால் மற்றும் அசிட்டோனில் கரையாது ஆனால் தண்ணீரில் சிறிது கரையும். Nd2(WO4)3·9H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒன்பது நீரேற்று சேர்மத்தை இது உருவாக்குகிறது.
மேற்கோள்கள்
வார்ப்புரு:மேற்கோள்பட்டியல் வார்ப்புரு:நியோடிமியம் சேர்மங்கள்