நெப்டியூனியம் ஆர்சனைடு
Jump to navigation
Jump to search
நெப்டியூனியம் ஆர்சனைடு (Neptunium arsenide) என்பது நெப்டியூனியம் மற்றும் ஆர்சனிக்கு ஆகிய தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஓர் இருமச் சேர்மம் ஆகும். NpAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இக்கனிம வேதியியல் சேர்மம் விவரிக்கப்படுகிறது. கலவை படிகங்களை உருவாக்குகிறது. நெப்டியூனியம் ஆர்சனைடு படிகங்களாக உருவாகிறது.
தயாரிப்பு
தூய நிலையிலுள்ள நெப்டியூனியம் மற்றும் ஆர்சனிக்கு தனிமங்களை விகிதவியல் அளவுகளில் சேர்த்து வினைபுரியச் செய்தால் நெப்டியூனியம் ஆர்சனைடு உருவாகிறது:
இயற்பியல் பண்புகள்
நெப்டியூனியம் ஆர்சனைடு பல வேறுபட்ட மாற்றங்களுடன் படிகங்களை உருவாக்குகிறது:[1][2]
- கனசதுரப் படிகத் திட்டம், Fm3m என்ற இடக்குழு, a = 0.5835 நானோமீட்டர் என்ற செல் அளவுருடன் –131 °செல்சியசு வெப்பநிலைக்கு கீழான வெப்பநிலையில் தோன்றும்.
- முக்கோணப் படிகத் திட்டம், a = 0.58312 நானோமீட்டர், c = 0.58281 நானோமீட்டர் என்ற செல் அளவுருக்களுடன் –131 முதல் –98 °செல்சியசு வெப்பநிலைக்கு கீழான வெப்பநிலையில் தோன்றும். .
- கனசதுரத் திட்டம், இடக்குழு Fm3m, a = 0.58318 நானோமீட்டர் என்ற செல் அளவுருவுடன் –98 °செல்சியசு வெப்பநிலைக்கு கீழான வெப்பநிலையில் தோன்றும்.
175 கெல்வின் வெப்பநிலையில் நெப்டியூனியம் ஆர்சனைடு எதிர்பெரோகாந்தத் தன்மைக்கு மாறுகிறது.[3][4][5]