புரோடாக்டினியம்(IV) குளோரைடு
புரோடாக்டினியம்(IV) குளோரைடு (Protactinium(IV) chloride) என்பது PaCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோடாக்டினியமும் குளோரைடும் சேர்ந்து இந்த ஆக்டினியம் ஆலைடு உருவாகிறது. நாற்கோண படிக அமைப்பின் மஞ்சள்-பச்சை நிறப் படிகமாக புரோடாக்டினியம்(IV) குளோரைடு காணப்படுகிறது.
தயாரிப்பு
புரோடாக்டினியம்(V) குளோரைடை ஒடுக்க வினைக்கு உட்படுத்தி புரோடாக்டினியம்(IV) குளோரைடை தயாரிக்கலாம்.[1]
புரோடாக்டினியம்(IV) ஆக்சைடை ஆலசனேற்ற வினைக்கு உட்படுத்தி குளோரினேற்றம் செய்தும் இதை தயாரிக்கலாம்:[1]
வெற்றிடத்தில் 500 பாகை செல்சியசு வெப்பநிலையில் புரோடாக்டினியம் ஆக்சி குளோரைடை சிதைவு வினைக்கு உட்படுத்தியும் புரோடாக்டினியம்(IV) குளோரைடை தயாரிக்கலாம்:[2]
பண்புகள்
புரோடாக்டினியம்(IV) குளோரைடு நீருறிஞ்சும் படிகத் திடப்பொருளாகும். வெற்றிடத்தில் 400 °செல்சியசு வெப்பநிலையில் இது பதங்கமாகும். வலுவான கனிம அமிலங்களில் கரைந்து பச்சை நிற கரைசல்களை உருவாக்கும். அசிட்டோ நைட்ரைலுடன் சேர்ந்து சிக்கலான PaCl4·4CH3CN அணைவுச் சேர்மத்தைக் கொடுக்கிறது. I41/am இடக்குழு எண். 141) என்ற இடக்குழுவில் a = 837.7 பைக்கோமீட்டர், c = 747.9 பைக்கோமீட்டர் என்ற அளவுருக்களுடன் யுரேனியம்(IV) குளோரைடு வகை படிகக் கட்டமைப்புடன் இச்சேர்மம் ஒரு நாற்கோணப் படிக அமைப்பைக் கொண்டுள்ளது.[1] of the uranium(IV) chloride type.[3]
மேற்கோள்கள்
வார்ப்புரு:Reflist வார்ப்புரு:புரோடாக்டினியம் சேர்மங்கள்
- ↑ 1.0 1.1 1.2 Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band I, Ferdinand Enke, Stuttgart 1975, வார்ப்புரு:ISBN, pp. 1176.
- ↑ வார்ப்புரு:Citation
- ↑ Lester R. Morss, Norman M. Edelstein, J. Fuger (Hrsg.): . Bände 1-6. Springer, Dordrecht 2010, வார்ப்புரு:ISBN, S. 201 (English, [1] in Google Books).