பொலோனியம் டெட்ராநைட்ரேட்டு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

பொலோனியம் டெட்ராநைட்ரேட்டு (Polonium tetranitrate) Po(NO3)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது.[1] பொலோனியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இந்த கனிமச் சேர்மம் உருவாகிறது. வெள்ளை நிற படிகங்களாக உருவாகும் இச்சேர்மம் கதிரியக்கப் பண்பை வெளிப்படுத்துகிறது.[2][3]

தயாரிப்பு

அடர் நைட்ரிக் அமிலத்தில் பொலோனியம் உலோகத்தைக் கரைத்து பொலோனியம் டெட்ராநைட்ரேட்டு தயாரிக்கப்படுகிறது.

𝖯𝗈+𝟪𝖧𝖭𝖮𝟥  𝖯𝗈(𝖭𝖮𝟥)𝟦+𝟦𝖭𝖮𝟤+𝟦𝖧𝟤𝖮

இயற்பியல் பண்புகள்

வெண்மை[4] அல்லது நிறமற்ற படிகங்களாக பொலோனியம் டெட்ராநைட்ரேட்டு உருவாகிறது.[5] மேலும், தண்ணீரில் நீராற்பகுப்பு அடைந்து கரைகிறது

வேதிப்பண்புகள்

வலிமை குறைந்த நீரிய நைட்ரிக் அமில கரைசலில் விகிதாச்சார அளவின்றி இது சிதைவடைகிறது.

𝟤𝖯𝗈(𝖭𝖮𝟥)𝟦+𝟤𝖧𝟤𝖮  𝖯𝗈𝖮𝟤(𝖭𝖮𝟥)𝟤+𝖯𝗈𝟤++𝟤𝖭O𝟥+𝟤𝖧𝖭𝖮𝟥

பொலோனியம் (2+) அயனி நைட்ரிக் அமிலத்துடனான வினையில் பொலோனியம் (4+) அயனியாக ஆக்சிசனேற்றமடைகிறது.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:பொலோனியம் சேர்மங்கள் வார்ப்புரு:Nitrates