வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு
வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு (Tin(II) oxalate) C2O4Sn என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளீயமும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து இவ்வுப்பு உருவாகிறது. வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு நிறமற்ற படிகங்களைப் போல தோற்றமளிக்கும். தண்ணீரில் இது கரையாது. மேலும் படிக நீரேற்றுகளை உருவாக்கும்.
தயாரிப்பு
ஆக்சாலிக் அமிலம் மற்றும் வெள்ளீயம்(II) ஆக்சைடு வினைபுரிவதால் வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு உருவாகிறது:
வெள்ளீய(II) குளோரைடு மற்றும் ஆக்சாலிக் அமிலம் வினைபுரிந்தாலும் வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு உருவாகும்.[1]
பண்புகள்
வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு நிறமற்ற படிகங்களாக உருவாகிறது.
நீர் மற்றும் அசிட்டோனில் கரையாது. நீர்த்த HCl, மெத்தனால் மற்றும் பெட்ரோலியம் ஈதரில் கரையும்.[2][3]
SnC2O4•n H2O என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டு வகையில் இது படிக நீரேற்றை உருவாக்குகிறது. இவ்வாய்ப்பாட்டிலுள்ள n = 1,2 என அமையும்.
சூடுபடுத்தினால் சிதைவடையும்:
பயன்கள்
- கரிம எசுத்தர்களையும் நெகிழியாக்கிகளையும் தயாரிக்கும் வினையில் வெள்ளீயம்(II) ஆக்சலேட்டு ஒரு வினையூக்கியாகப் பயன்படுகிறது.[2]
- துணிகளுக்கு சாயமிடுவதற்கும் அச்சிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
- இசுட்டானசு வாய்வழி பராமரிப்பு சேர்மங்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
- வெள்ளீயம்(II) ஆக்சலேட்டை மீள்நிரப்பு செய்யக்கூடிய வகை இலித்தியம் மின்கலங்களுக்கு நேர்மின்முனைப் பொருளாகப் பயன்படுத்துவது குறித்து சில ஆய்வுகள் அறிக்கை அளித்துள்ளன.[4]