பல்லுறுப்புக்கோவையின் படி

testwiki இலிருந்து
imported>Booradleyp1 பயனரால் செய்யப்பட்ட 16:14, 7 சூலை 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (Booradleyp1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கணிதத்தில், ஒரு பல்லுறுப்புக்கோவையின் படி (degree) என்பது அப் பல்லுறுப்புக்கோவையிலுள்ள உறுப்புகளின் படிகளிலேயே மிக உயர்ந்த படியாகும். பல்லுறுப்புக்கோவையின் ஒரு உறுப்பின் படி என்பது, அந்தக் குறிப்பிட்ட உறுப்பிலுள்ள மாறிகளின் அடுக்குகளின் கூடுதலாகும். பல்லுறுப்புக்கோவையின் படியைக் கணக்கிடும்போது, அக்கோவையானது நியமன வடிவில் (canonical form) இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டு
7x2y3+4x9 பல்லுறுப்புக்கோவையில் மூன்று உறுப்புகள் உள்ளன. (இக்கோவையை 7x2y3+4x1y09x0y0 என்றும் எழுதலாம்)
முதல் உறுப்பு 7x2y3 இன் படி 5 (x மாறியின் அடுக்கு 2 + y மாறியின் அடுக்கு 3);
இரண்டாவது உறுப்பு 4xஇன் படி 1;
கடைசி உறுப்பு 9இன் படி 0.
இம் மூன்று படிகளில் மிகஉயர்ந்த படி 5 என்பதால், இப் பல்லுறுப்புக்கோவையின் படி 5 ஆகும்.

பல்லுறுப்புக்க்கோவை நியமனவடிவில் தரப்படவில்லையெனில் முதலில் அதனை நியமனவடிவிற்கு மாற்றிக் கொண்ட பின்னரே அதன் படியைக் கணக்கிடல் வேண்டும்.

எடுத்துக்காட்டு
(x+1)2(x1)2

இப்பல்லுறுப்புக்க்கோவை நியமனவடிவில் இல்லை. எனவே கோவையிலுள்ள வர்க்கங்களை விரித்துச் சுருக்கக் கிடைப்பது:

(x+1)2(x1)2=(x2+2x+1)(x22x+1)=4x

இது ஓருறுப்புக்கோவையாக அமைகிறது; அந்த உறுப்பின் படி 1 என்பதால் தரப்பட்டப் பல்லுறுப்புக்கோவையின் படி 1 ஆகும்.

எனினும், ஒரு பல்லுறுப்புக்கோவையானது நியமவடிவிலுள்ள இரு பல்லுறுப்புக்கோவைகளின் பெருக்கல் வடிவில் அமைந்திருக்குமானால் அதன் படி காண்பதற்கு, அதனை நியமவடிவிற்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. காரணிகளின் பெருக்குத்தொகையின் படியானது அக்காரணிகளின் தனித்தனி படிகளின் கூட்டுத்தொகைக்குச் சமமாக இருக்கும். அதனால் பல்லுறுப்புக்கோவையைத் தரப்பட்ட வடிவை மாற்றாமலேயே அதன் படியைக் கணக்கிடலாம்.

படியைப் பொறுத்துப் பல்லுறுப்புக்கோவையின் பெயர்கள்

பல்லுறுப்புக்க்கோவைகளுக்கு அவற்றின் படிகளைப் பொறுத்து சிறப்புப் பெயர்கள் வழங்கப்படுகின்றன:[1][2][3]

மேலும் சில உயர்படிப் பல்லுறுப்புக்கோவைகளுக்கும் பெயர்கள் உள்ளன.[5] ஆனால் அவை அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன:

  • படி 8 – எண்படிப் பல்லுறுப்புக்கோவை (octic)
  • படி 9 – ஒன்பான்படி பல்லுறுப்புக்கோவை (nonic)
  • படி 10 – பத்தாம்படி பல்லுறுப்புக்கோவை (decic)

சில எடுத்துக்காட்டுகள்

  • 35x+2x57x9 -ஒன்பான்படி பல்லுறுப்புக்கோவை.
  • (y3)(2y+6)(4y21) - முப்படி பல்லுறுப்புக்கோவை
  • (3z8+z54z2+6)+(3z8+8z4+2z3+14z) -ஐம்படி பல்லுறுப்புக்கோவை (z8 நீக்கம் பெற்றுவிடுகிறது)

மேலேயுள்ள பல்லுறுப்புக்கோவைகளின் நியமன வடிவம்:

  • 35x+2x57x9=7x9+2x55x+3;
  • (y3)(2y+6)(4y21)=8y342y2+72y+378;
  • (3z8+z54z2+6)+(3z8+8z4+2z3+14z)=z5+8z4+2z34z2+14z+6.

கணிதச் செயல்களில்

  • P , Q இரு பல்லுறுப்புக்கோவைகள் எனில்:
deg(P+Q)max(deg(P),deg(Q))
deg(PQ)max(deg(P),deg(Q))

எடுத்துக்காட்டு:

(x3+x)+(x2+1)=x3+x2+x+1 இன் படி 3 {3 ≤ max(3, 2))
(x3+x)(x3+x2)=x2+x இன் படி 2. (2 ≤ max(3, 3))
  • ஒரு பல்லுறுப்புக்கோவையைச் சுழியற்றத் திசையிலியால் பெருக்கக் கிடைக்கும் புது பல்லுறுப்புக்கோவையின் படியானது மூலப் பல்லுறுப்புக்கோவையின் படியாகவே இருக்கும்.
deg(cP)=deg(P) (P ஒரு பல்லுறுப்புக்கோவை, c ஒரு சுழியற்ற திசையிலி)

எடுத்துக்காட்டு:

x2+3x2 இன் படி 2;

இப் பல்லுறுப்புக்கோவையை இரண்டால் பெருக்கக் கிடைக்கும் பல்லுறுப்புக்கோவை:

2(x2+3x2)=2x2+6x4 இதன் படியும் 2 ஆகவே உள்ளதைக் காணலாம்.
  • deg(PQ)=deg(P)+deg(Q).

எடுத்துக்காட்டு:

P=x3+x இன் படி 3;
Q=x2+1 இன் படி 2;
(x3+x)(x2+1)=x5+2x3+x இன் படி 5.
  • deg(PQ)=deg(P)deg(Q).

எடுத்துக்காட்டு:

P=(x3+x) இன் படி 3;
Q=(x2+1) இன் படி 2;
PQ=P(x2+1)=(x2+1)3+(x2+1)=x6+3x4+4x2+2 இன் படி 6

குறிப்புகள்

வார்ப்புரு:Reflist

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  1. வார்ப்புரு:Cite web
  2. Mac Lane and Birkhoff (1999) define "linear", "quadratic", "cubic", "quartic", and "quintic". (p. 107)
  3. King (2009) defines "quadratic", "cubic", "quartic", "quintic", "sextic", "septic", and "octic".
  4. Shafarevich (2003) says of a polynomial of degree zero, f(x)=a0: "Such a polynomial is called a constant because if we substitute different values of x in it, we always obtain the same value a0." (p. 23)
  5. James Cockle proposed the names "sexic", "septic", "octic", "nonic", and "decic" in 1851. (Mechanics Magazine, Vol. LV, p. 171)