டால்ட்டனின் விதி

வேதியியலிலும், இயற்பியலிலும் டால்ட்டனின் விதி (Dalton's law) அல்லது டால்டனின் பகுதி அழுத்த விதி (Dalton's law of partial pressures) என்பது ஒரு கலத்தில் உள்ள ஒரு வளிமக் கலவையின் அழுத்தம், கலவையிலுள்ள ஒவ்வொரு வளிமமும் கலத்திலுள்ளபோது பெற்றிருக்கும் தனித்தனி அழுத்தத்தின் கூட்டுத் தொகைக்கு சமமாகும்.[1] இப்பரிசோதனை விதி 1801 ஆம் ஆண்டில் ஜான் டால்ட்டன் என்பவரால் கூறப்பட்ட இவ்விதி இலட்சிய வளிம விதிகளுடன் தொடர்புடையது.
ஒன்றுடன் ஒன்று தாக்கமடையாத வளிமங்களைக் கொண்ட கலவை ஒன்றின் மொத்த அழுத்தம் பின்வருமாறு தரப்படும்:
- அல்லது
இங்கு ஒவ்வொரு வளிமக் கூறினதும் பகுதி அழுத்தம் ஆகும்.[1]
இங்கு என்பது n கூறுகளைக் கொண்ட கலவையின் i-வது கூறின் மோல் பின்னம் ஆகும்.