மோல் பின்னம்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

இரசாயனவியலில், மோல் பின்னம் என்பது கலவையொன்றில் உள்ள குறிப்பிட்ட கூறுக்கும் கலவையிலுள்ள எல்லாக் கூறுகளுக்கும் இடையிலான விகிதமாகும்.[1] ni என்பது குறிப்பிட்ட கூறின் அளவாகவும், ntot என்பது கலவையிலுள்ள எல்லாக் கூறுகளினதும் அளவாகவும் இருப்பின், மோல்பின்னம் xi ஆனது:

xi=nintot

ஒரு கலவையிலுள்ள எல்லாக் கூறுகளினதும் மோல்பின்னங்களின் கூட்டுத்தொகை 1க்குச் சமனாகும்:

i=1Nni=ntot;i=1Nxi=1

மோல்பின்னம், அளவுப் பின்னம் எனவும் அழைக்கப்படும்.[1] இது எண் பின்னத்துக்குச் சமனாகும். எண் பின்னம் எனப்படுவது, குறிப்பிட்ட கூறொன்றின் மூலக்கூறுகளின் எண்ணிக்கை Niக்கும், கலவையிலுள்ள எல்லா மூலக்கூறுகளின் எண்ணிக்கை Ntotக்கும் இடையிலான விகிதமாகும். மோல் பின்னம் கிரேக்கச் சிற்றெழுத்தான χ (சை)யினால் குறிக்கப்படும்.[2][3] வாயுக்கலவைகளுக்கு yயை IUPAC பரிந்துரைக்கிறது.[1]

இயல்புகள்

அவத்தை வரைபடங்களின் உருவாக்கலில் மோல் பின்னம் பரந்தளவில் பயன்படுத்தப்படுகிறது. இது பல அனுகூலங்களைக் கொண்டுள்ளது. அவையாவன:

  • இது வெப்பநிலையில் தங்கியிருப்பதில்லை (மூலர் செறிவைப்போல்). மேலும் குறிப்பிட்ட அவத்தைகளின் அடர்த்தி பற்றிய அறிவும் தேவைப்படாது.
  • மோல் பின்னம் அறியப்பட்ட கலவையொன்று, கூறுகளின் உருய திணிவுகளை நிறுப்பதன் மூலம் தயாரிக்கப்படலாம்.
  • இலட்சிய வாயுக்களின் கலவையொன்றில், மோல் பின்னத்தை அக்கூறின் பகுதியமுக்கத்துக்கும் கலவையின் மொத்த அமுக்கத்துக்கும் இடையிலான விகிதமாக குறிப்பிடலாம்.

மேற்கோள்கள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=மோல்_பின்னம்&oldid=774" இலிருந்து மீள்விக்கப்பட்டது