பகுதியமுக்கம்

testwiki இலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 02:18, 20 திசம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20231219)) #IABot (v2.0.9.5) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வளிமங்களின் ஒரு கலவையில், ஒவ்வொரு வளிமமும் கொண்டிருக்கும் பகுதியமுக்கம் அல்லது பகுதியழுத்தம் (Partial pressure) என்பது அவ்வளிமமானது கலவையின் கனவளவிலும் வெப்பநிலையிலும் தனியே இருக்குமானால், ஏற்படுத்தும் கருதுகோள் அமுக்கம் ஆகும்.[1] ஒரு கருத்தியல் வளிமக் கலவையின் மொத்த அமுக்கமானது, அக்கலவையிலுள்ள வளிமங்களின் பகுதியமுக்கங்களின் கூட்டுத்தொகைக்குச் சமனாகும்.[2]

ஒரு கருத்தியல் வளிமக் கலவையினுள் X என்னும் வளிமம் உள்ளது என்க.

VXVtot=pXPtot=nXntot[3]
  • VX என்பது Xஇன் பகுதிக் கனவளவு ஆகும்.
  • Vtot என்பது வளிமக் கலவையின் மொத்தக் கனவளவு ஆகும்.
  • pX என்பது Xஇன் பகுதியமுக்கம் ஆகும்.
  • Ptot என்பது வளிமக் கலவையின் மொத்த அமுக்கம் ஆகும்.
  • nX என்பது Xஇன் மூலளவு ஆகும்.
  • ntot என்பது வளிமக் கலவையின் மொத்த மூலளவு ஆகும்.

தாற்றனின் பகுதியமுக்க விதி

வார்ப்புரு:Main தாற்றனின் பகுதியமுக்க விதிப்படி, ஒன்றோடொன்று வேதித் தாக்கத்தில் ஈடுபடாத வளிமங்களைக் கொண்ட ஒரு வளிமக் கலவையின் மொத்த அமுக்கமானது, கலவையிலுள்ள வளிமங்களின் பகுதியமுக்கங்களின் கூட்டுத்தொகைக்குச் சமனாகும்.[2]

X, Y, Z ஆகிய மூன்று கருத்தியல் வளிமங்களைக் கொண்ட வளிமக் கலவையைக் கருதுக.

Ptot=pX+pY+pZ[2]

இங்கு Ptot என்பது வளிமக் கலவையின் மொத்த அமுக்கம் ஆகும். pX, pY , pZ என்பன முறையே, X, Y, Z ஆகிய வளிமங்களின் பகுதியமுக்கங்கள் ஆகும்.

கருத்தியல் வளிமக் கலவைகள்

கருத்தியல் வளிமக் கலவைகளில், பகுதியமுக்கங்களின் விகிதமானது, ஒத்த மூலளவுகளின் விகிதத்திற்குச் சமனாகும். இதிலிருந்து,

Xi=piPtot=nintot

ஆகவே,

pi=XiPtot[3]

இங்கு,

  • Xi = வளிமக் கலவையிலுள்ள ஏதாவதொரு வளிமத்தின் மூல் பின்னம்
  • pi = வளிமக் கலவையிலுள்ள ஏதாவதொரு வளிமத்தின் பகுதியமுக்கம்
  • ni = வளிமக் கலவையிலுள்ள ஏதாவதொரு வளிமத்தின் மூலளவு
  • ntot = வளிமக் கலவையின் மொத்த மூலளவு
  • Ptot = வளிமக் கலவையின் மொத்த அமுக்கம்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=பகுதியமுக்கம்&oldid=1096" இலிருந்து மீள்விக்கப்பட்டது