சுருள்வு அணி
கணிதத்தில் சுருள்வு அணி அல்லது சுருள் அணி (involutory matrix) என்பது தனக்குத்தானே நேர்மாறு அணியாக உள்ள ஒரு அணியாகும். A2 = I ஆக இருந்தால், இருந்தால் மட்டுமே, A அணியால் பெருக்குவது ஒரு சுருள்வாக இருக்கும். ஒரு அணி மற்றும் அதன் நேர்மாறு அணி இரண்டின் பெருக்கல் முற்றொருமை அணியாக இருக்கும் என்பதால், சுருள்வு அணிகள் எல்லாம் முற்றொருமை அணியின் வர்க்கமூலங்களாக (அணிகளின் வர்க்கமூலம்) அமையும்.[1]
எடுத்துக்காட்டுகள்
எனில், மெய்யெண்களாலான 2 × 2 அணி ஒரு சுருள்வு அணியாக இருக்கும். [2]
சுருள்வு அணிகளுக்கு எடுத்துக்காட்டுகள்:
இவற்றில்,
- I முற்றொருமை அணி
- R -ஒரு சோடி நிரல்கள் பரிமாற்றப்பட்ட முற்றொருமை அணி
சமச்சீர்
ஒரு சுருள்வு அணியானது சமச்சீர் அணியாகவும் இருந்தால் அவ்வணி ஒரு செங்குத்து அணியாகவும் இருக்கும். மறுதலையாக செங்குத்து அணியாகவும் உள்ள ஒவ்வொரு சுருள்வு அணியும் சமச்சீர் அணியாகவும் இருக்கும்.[3] இதன் சிறப்புவகையாக ஒவ்வொரு எதிரொளிப்பு அணியும் சுருள்வு அணியாக இருக்கும்.
பண்புகள்
- ½(A + I) என்பது ஒரு தன்னடுக்கு அணியாக இருந்தால், இருந்தால் மட்டுமே, n × n வரிசையணி A ஒரு சுருள்வு அணியாகும். இதனால் சுருள்வு அணிகளுக்கும் தன்னடுக்கு அணிகளுக்கும் இடையே ஒரு இருவழிக்கோப்பு அமைகிறது.[4]
- A , B இரு சுருள்வு அணிகள் மற்றும் AB = BA ஆக இருந்தால், AB அணியும் சுருள்வு அணியாகும்.
- A ஒரு சுருள்வு அணி எனில் அதன் ஒவ்வொரு அடுக்கும் சுருள்வு அணியாக இருக்கும். :n ஒற்றை எண் எனில், An = A
- n இரட்டை எண் எனில், An = I
மேற்கோள்கள்
- ↑ வார்ப்புரு:Citation.
- ↑ Peter Lancaster & Miron Tismenetsky (1985) The Theory of Matrices, 2nd edition, pp 12,13 Academic Press வார்ப்புரு:ISBN
- ↑ வார்ப்புரு:Citation.
- ↑ 4.0 4.1 வார்ப்புரு:Citation.