வெப்ப விரவல்திறன்

testwiki இலிருந்து
imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 09:04, 2 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வெப்பவியலில், வெப்பப் பரிமாற்றம் குறித்த ஆய்வில், வெப்ப விரவல்திறன் (thermal diffusivity) என்பது வெப்பக் கடத்துதிறனை அடர்த்தியாலும், நிலையான அழுத்தத்தில் நிலவும் தன்வெப்பக் கொள்திறனாலும் வகுக்கும்போது கிடைப்பதாகும்.[1] அது ஒரு பொருளின் வெம்பிய பக்கத்தில் இருந்து குளிர்ந்த பக்கத்துக்கு மாறும் வெப்பத்தின் வேகத்தை அளக்கிறது. இதன் அலகு m²/s ஆகும். பொதுவாக வெப்ப விரவல்திறனை α என்னும் குறியைக் கொண்டு குறிப்பர் என்றாலும், a, κ,[2] K,[3] மற்றும் D இவையும் பயன்பாட்டில் உண்டு. இதன் வாய்பாடு:

α=kρcp

இங்கே,

  • k என்பது வெப்பக் கடத்துதிறன் (W/(m·K))
  • ρ என்பது அடர்த்தி (kg/m³)
  • cp என்பது தன்வெப்பக்கொள்திறன் (J/(kg·K))

ρcp இரண்டும் சேர்ந்து கொள்ளளவு வெப்பக் கொள்திறன் ஆகும் (J/(m³·K)).

வெப்பச் சமன்பாட்டில் பார்த்தது போல[4],

Tt=α2T,

வெப்ப விரவல்திறன் அதிகமிருக்கும் ஒரு பொருளில், வெப்பக் கடத்தல் விரைவாக நடைபெறும்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=வெப்ப_விரவல்திறன்&oldid=1289" இலிருந்து மீள்விக்கப்பட்டது