புளுட்டோனியம் ஆர்சனைடு

testwiki இலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 10:52, 5 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:பாறை உப்பு படிகக் கட்டமைப்பு using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

புளுட்டோனியம் ஆர்சனைடு (Plutonium arsenide) என்பது PuAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியமும் ஆர்சனிக்கும் சேர்ந்து இந்த இரும கனிமச் சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு

வெற்றிடத்தில் அல்லது ஈலியம் வாயுச்சூழலில் தூய புளுட்டோனியம், ஆர்சனிக்கு தனிமங்களைச் சேர்த்து சூடுபடுத்தினால் புளுட்டோனியம் ஆர்சனைடு உருவாகிறது.[1] இவ்வினை வெப்பம் உமிழ் வினையாகும்.

Pu+AsPuAs

புளுட்டோனியம் ஐதரைடு மீது ஆர்சின் வாயுவைச் செலுத்தியும் புளுட்டோனியம் ஆர்சனைடு தயாரிக்கமுடியும்.

2PuHA2+2AsHA32PuAs+5HA2

இயற்பியல் பண்புகள்

Fm3m என்ற இடக்குழுவில், a = 0.5855 nm, Z = 4, என்ற அலகு அளபுருபுகளுடன் சோடியம் குளோரைடு கட்டமைப்பில்[2] கனசதுர படிகமாக புளுட்டோனியம் ஆர்சனைடு அடர் சாம்பல் அல்லது கருப்பு நிறத்தில் படிகமாகிறது.[3]

உயர் அழுத்தத்தில் (சுமார் 35 கிகாபாசுக்கல்), ஒரு நிலை மாற்றம் ஏற்பட்டு சீசியம் குளோரைடு வகை கட்டமைப்பிற்கு ஏற்படுகிறது.[4]

129 கெல்வின் வெப்பநிலையில் புளுட்டோனியம் ஆர்சனைடு பெரோகாந்தப் பண்பு நிலையை அடைகிறது.[5]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:புளுட்டோனியம் சேர்மங்கள்