புளுட்டோனியம் ஆர்சனைடு
புளுட்டோனியம் ஆர்சனைடு (Plutonium arsenide) என்பது PuAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியமும் ஆர்சனிக்கும் சேர்ந்து இந்த இரும கனிமச் சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
வெற்றிடத்தில் அல்லது ஈலியம் வாயுச்சூழலில் தூய புளுட்டோனியம், ஆர்சனிக்கு தனிமங்களைச் சேர்த்து சூடுபடுத்தினால் புளுட்டோனியம் ஆர்சனைடு உருவாகிறது.[1] இவ்வினை வெப்பம் உமிழ் வினையாகும்.
புளுட்டோனியம் ஐதரைடு மீது ஆர்சின் வாயுவைச் செலுத்தியும் புளுட்டோனியம் ஆர்சனைடு தயாரிக்கமுடியும்.
இயற்பியல் பண்புகள்
Fm3m என்ற இடக்குழுவில், a = 0.5855 nm, Z = 4, என்ற அலகு அளபுருபுகளுடன் சோடியம் குளோரைடு கட்டமைப்பில்[2] கனசதுர படிகமாக புளுட்டோனியம் ஆர்சனைடு அடர் சாம்பல் அல்லது கருப்பு நிறத்தில் படிகமாகிறது.[3]
உயர் அழுத்தத்தில் (சுமார் 35 கிகாபாசுக்கல்), ஒரு நிலை மாற்றம் ஏற்பட்டு சீசியம் குளோரைடு வகை கட்டமைப்பிற்கு ஏற்படுகிறது.[4]
129 கெல்வின் வெப்பநிலையில் புளுட்டோனியம் ஆர்சனைடு பெரோகாந்தப் பண்பு நிலையை அடைகிறது.[5]