ஒற்றையுறுப்பு கணம்

testwiki இலிருந்து
imported>Booradleyp1 பயனரால் செய்யப்பட்ட 09:05, 25 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:கணக் கோட்பாடு; added Category:கணக் கோட்பாட்டு அடிப்படை கருத்துருக்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கணிதத்தில், ஒற்றையுறுப்பு கணம் அல்லது ஓருறுப்பு கணம் (singleton) என்பது ஒரேயொரு உறுப்பை மட்டுமே கொண்டுள்ள ஒரு கணமாகும். இது அலகு கணம் (unit set) எனவும் அழைக்கப்படுகிறது.[1] எடுத்துக்காட்டாக, 0 என்ற ஒரேயொரு உறுப்பை மட்டும் கொண்டுள்ள {0} கணமானது ஒற்றையுறுப்பு கணமாகும்.

A = {a} என்பது ஒரு ஒற்றையுறுப்பு கணம். இதில் A என்பது கணத்தையும், a ஆனது கணத்திலுள்ள ஒற்றை உறுப்பையும் குறிக்கின்றன.

ஒற்றையுறுப்புக் கணத்தின் எண்ணளவை (உறுப்புகளின் எண்ணிக்கை) "1" ஆகும்.
ஒற்றையுறுப்புக் கணத்தின் உட்கணங்களின் எண்ணிக்கை "2" ஆகும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள A கணத்திற்கு { }, {a} என இரு உட்கணங்கள் உள்ளன.

தரப்பட்ட ஒரு கணத்தின் ஒற்றையுறுப்பு உட்கணங்களின் எண்ணிக்கை அக்கணத்திலுள்ள உறுப்புகளின் எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக,

A = {a, e, i , o, u}. இக்கணத்தில் 5 உறுப்புகள் உள்ளன.
A இன் ஒற்றையுறுப்பு உட்கணங்கள்: {a}, {e}, {i}, {o}, {u}

பண்புகள்

  • கணக் கோட்பாட்டின்படி, எந்தவொரு கணமும் தனக்குத்தானே ஒரு உறுப்பாக இருக்காது. எனவே கண்டிப்பாக ஒற்றையுறுப்பு கணமானது அதனுள் உள்ள ஒரேயொரு உறுப்பிலிருந்து வேறுபட்டது.[1] எடுத்துக்காட்டாக,
    • 1, {1} - இவையிரண்டும் வெவ்வேறானவை;
    • வெற்றுக்கணமும் வெற்றுக்கணத்தை மட்டுமே ஒரேயொரு உறுப்பாகக் கொண்ட கணமும் வெவ்வேறானவை.
  • ஒற்றையுறுப்புக் கணத்தின் ஒரேயொரு உறுப்பும் ஒரு கணமாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக,
{{1,2,3}} என்ற ஒற்றையுறுப்பு கணத்தின் உறுப்பு 1,2,3 என்ற கணமாக (இது ஒற்றையுறுப்புக் கணமல்ல) இருப்பதைக் காணலாம்.

மேற்கோள்கள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=ஒற்றையுறுப்பு_கணம்&oldid=1620" இலிருந்து மீள்விக்கப்பட்டது