ஒற்றையுறுப்பு கணம்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

கணிதத்தில், ஒற்றையுறுப்பு கணம் அல்லது ஓருறுப்பு கணம் (singleton) என்பது ஒரேயொரு உறுப்பை மட்டுமே கொண்டுள்ள ஒரு கணமாகும். இது அலகு கணம் (unit set) எனவும் அழைக்கப்படுகிறது.[1] எடுத்துக்காட்டாக, 0 என்ற ஒரேயொரு உறுப்பை மட்டும் கொண்டுள்ள {0} கணமானது ஒற்றையுறுப்பு கணமாகும்.

A = {a} என்பது ஒரு ஒற்றையுறுப்பு கணம். இதில் A என்பது கணத்தையும், a ஆனது கணத்திலுள்ள ஒற்றை உறுப்பையும் குறிக்கின்றன.

ஒற்றையுறுப்புக் கணத்தின் எண்ணளவை (உறுப்புகளின் எண்ணிக்கை) "1" ஆகும்.
ஒற்றையுறுப்புக் கணத்தின் உட்கணங்களின் எண்ணிக்கை "2" ஆகும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள A கணத்திற்கு { }, {a} என இரு உட்கணங்கள் உள்ளன.

தரப்பட்ட ஒரு கணத்தின் ஒற்றையுறுப்பு உட்கணங்களின் எண்ணிக்கை அக்கணத்திலுள்ள உறுப்புகளின் எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக,

A = {a, e, i , o, u}. இக்கணத்தில் 5 உறுப்புகள் உள்ளன.
A இன் ஒற்றையுறுப்பு உட்கணங்கள்: {a}, {e}, {i}, {o}, {u}

பண்புகள்

  • கணக் கோட்பாட்டின்படி, எந்தவொரு கணமும் தனக்குத்தானே ஒரு உறுப்பாக இருக்காது. எனவே கண்டிப்பாக ஒற்றையுறுப்பு கணமானது அதனுள் உள்ள ஒரேயொரு உறுப்பிலிருந்து வேறுபட்டது.[1] எடுத்துக்காட்டாக,
    • 1, {1} - இவையிரண்டும் வெவ்வேறானவை;
    • வெற்றுக்கணமும் வெற்றுக்கணத்தை மட்டுமே ஒரேயொரு உறுப்பாகக் கொண்ட கணமும் வெவ்வேறானவை.
  • ஒற்றையுறுப்புக் கணத்தின் ஒரேயொரு உறுப்பும் ஒரு கணமாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக,
{{1,2,3}} என்ற ஒற்றையுறுப்பு கணத்தின் உறுப்பு 1,2,3 என்ற கணமாக (இது ஒற்றையுறுப்புக் கணமல்ல) இருப்பதைக் காணலாம்.

மேற்கோள்கள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=ஒற்றையுறுப்பு_கணம்&oldid=1620" இலிருந்து மீள்விக்கப்பட்டது