பிரசியோடைமியம் ஆண்டிமோணைடு
பிரசியோடைமியம் ஆண்டிமோனைடு (Praseodymium antimonide) PrSb. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியமும் ஆண்டிமனியும் சேர்ந்து இந்த இரும உப்பு உருவாகிறது.
தயாரிப்பு
பிரசியோடைமியத்துடன் ஆண்டிமனியை சேர்த்து வெற்றிடத்தில் சூடுபடுத்தினால் பிரசியோடைமியம் ஆண்டிமோனைடு உருவாகும்.
இயற்பியல் பண்புகள்
F m3m என்ற இடக்குழுவுடன் a = 0.638 nm, Z = 4 என்ற செல் அளவுருக்களுடனும் பிரசியோடைமியம் ஆண்டிமோனைடு கனசதுரப் படிகங்களாக உருவாகிறது. சோடியம் குளோரைடு போன்ற கட்டமைப்பில் இதன் கட்டமைப்பும் உள்ளது.[1][2][3]
பிரசியோடைமியம் ஆண்டிமோனைடு 2170 ° செல்சியசு [1]அல்லது 2161 ° செல்சியசு வெப்பநிலையில்[2] உருகும். 1950 ° செல்சியசு வெப்பநிலையில், படிகங்களில் ஒரு நிலை மாற்றமும் 13 கிகா பாசுக்கல் அழுத்தத்தில், ஒரு நிலை மாற்றமும் ஏற்படுகிறது.[4]