பிரசியோடைமியம் பிசுமத்தைடு
Jump to navigation
Jump to search
பிரசியோடைமியம் பிசுமத்தைடு (Praseodymium bismuthide) BiPr என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும்.
தயாரிப்பு
1800 பாகை செல்சியசு வெப்பநிலையில் பிரசியோடைமியத்தையும் பிசுமத்தையும் விகிதவியல் அளவில் கலந்து வினைக்கு உட்படுத்தினால் பிரசியோடைமியம் பிசுமுத்தைடு உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்
Fm3m என்ற இடக்குழுவில் a = 0.64631 நானோமீட்டர், Z = 4 என்ற செல் அளவுருக்களுடன் பிரசியோடைமியம் பிசுமுத்தைடு சோடியம் குளோரைடின் (NaCl) படிக கட்டமைப்பில் கனசதுர படிகங்களாக உருவாகிறது.[1][2][3] இந்த சேர்மம் தோராயமாக 1800 ° செல்சியசு வெப்பநிலையில் உருகும்.[4][5] 14 கிகா பாசுக்கல் அழுத்தத்தில், இது ஒரு கட்ட மாற்றத்திற்கு உட்படுகிறது.[6]