விலக்கிய அல்லது வாயில்

testwiki இலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 23:12, 6 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.9.2)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
இல்லா வாயில்களை மாத்திரம் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட விலக்கிய அல்லது வாயில்

விலக்கிய அல்லது வாயில் (ஆங்கிலம்: XOR Gate அல்லது EXOR Gate) எனப்படுவது உள்ளீடுகளில் ஏதேனும் ஒன்று மட்டும் ஒன்று என இருப்பின், வெளியீடும் ஒன்றாக அமையும் தருக்கப் படலையாகும். இங்கே இரண்டு உள்ளீடுகளும் ஒன்று எனவோ அல்லது பூச்சியம் எனவோ அமைந்தால் வெளியீடு பூச்சியம் என அமையும்.[1]

குறியீடுகள்

விலக்கிய அல்லது வாயிலுக்கு ஏ. என். எசு. ஐ. குறியீடு, ஐ. இ. சி. குறியீடு என இரண்டு வகையான குறியீடுகள் காணப்படுகின்றன.

உண்மை அட்டவணை

Aஐயும் Bஐயும் உள்ளீடுகளாகக் கொண்ட விலக்கிய அல்லது வாயிலின் வெளியீடு (AB)+(AB) ஆகும்.

A B A XOR B
0 0 0
0 1 1
1 0 1
1 1 0

[2]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

sv:Disjunktion (logik)#OR-grind och XOR-grind