வடிவவியலில் ஆய்லரின் தேற்றம்

testwiki இலிருந்து
imported>Booradleyp1 பயனரால் செய்யப்பட்ட 16:22, 21 ஏப்ரல் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஆய்லரின் தேற்றம்:
d=|IO|=R(R2r)

வடிவவியலில் ஆய்லரின் தேற்றம் (Euler's theorem in geometry), ஒரு முக்கோணத்தின் உள்வட்ட மையத்திற்கும் சுற்றுவட்ட மையத்திற்கும் இடையேயுள்ள தூரத்தின் மதிப்பினைப் பின்வருமாறு தருகிறதுவார்ப்புரு:R:

d2=R(R2r)
(அல்லது)
1Rd+1R+d=1r,

இதில் R - சுற்றுவட்ட ஆரம், r - உள்வட்ட ஆரம்.

1765 இல் இதனை வெளியிட்ட கணிதவியலாளர் லியோனார்டு ஆய்லரின் பெயரால் அழைக்கப்படுகிறது.வார்ப்புரு:R 1746 இல் வில்லியம் சாப்பல் என்பவராலும் இத்தேற்றத்தின் முடிவு வெளியிடப்பட்டதாகும்.வார்ப்புரு:R

இத்தேற்றத்தின் கூற்றிலிருந்து கிடைக்கும் சமனின்மை

R2r ஆய்லரின் சமனின்மை என அழைக்கப்படுகிறது.வார்ப்புரு:Rவார்ப்புரு:R. இதிலுள்ள சமக்குறி சமபக்க முக்கோணத்திற்கு மட்டுமே பொருந்தும்.

இரு மைய நாற்கரத்தின் கார்லிட்ஸின் முற்றொருமை, இத்தேற்றத்தின் பொதுமைப்படுத்தலாகும்.

ஆய்லர் சமனின்மையின் வலுவான வடிவம்

ஆய்லர் சமனின்மையின் வலுவான வடிவம்வார்ப்புரு:R:

Rrabc+a3+b3+c32abcab+bc+ca123(ab+bc+ca)2,
a, b, c ஆகிய மூன்றும் முக்கோணத்தின் பக்க நீளங்களைக் குறிக்கின்றன.

நிறுவல்

இத்தேற்றத்தின் நிறுவலுக்கான படம்(நிறுவலுடன்).
  • முக்கோணம் ABC -ன் சுற்றுவட்ட மையம் O , உள்வட்ட மையம் I என்க.
  • கோட்டுத்துண்டு AI -ன் நீட்டிப்பு சுற்றுவட்டத்தைப் புள்ளி L -ல் சந்தித்தால், வட்டவில் BC -ன் நடுப்புள்ளியாக L இருக்கும்.
  • கோட்டுத்துண்டு LO வரைந்து நீட்டிக்க, அது சுற்றுவட்டத்தைச் சந்திக்கும் புள்ளி M என்க.
  • I -லிருந்து AB -க்கு வரையப்பட்ட செங்குத்தின் அடி, புள்ளி D என்க.
  • ID=r.
ADIMBL (வடிவொத்த முக்கோணங்கள்)
IDBL=AIML
ID×ML=AI×BL
2Rr=AI×BL----------------(1)
  • BI வரைக.
BIL -ல்:
BIL=ABC2+A2 --------(முக்கோணம் ABI -ன் ஒரு வெளிக்கோணம் BIL. மேலும் ஒரு முக்கோணத்தின் இரு கோணங்களின் கூட்டுத்தொகை, மூன்றாவது வெளிக்கோணத்திற்குச் சமம்.)
IBL=ABC2+CBL=ABC2+A2
(கோணங்கள் CBL, A/2 இரண்டும் சுற்றுவட்ட வில் LC -ஆனது மீதியுள்ள வட்டவில்லின் மீது அமையும் B மற்றும் A புள்ளிகளில் தாங்கும் கோணங்களாக அமைவதால் இரண்டும் சமம்.)
BIL=IBL

எனவே முக்கோணம் BIL ஒரு இருசமபக்க முக்கோணம்.

BL=IL,
இம்மதிப்பை (1)-ல் பிரதியிட:
2Rr=AI×IL--------(2)
  • OI -ஐ நீட்டிக்க அது சுற்றுவட்டத்தைச் சந்திக்கும் புள்ளிகள் P , Q என்க.
PI×QI=AI×IL ----(ஒரு வட்டத்தின் இரு வெட்டிக்கொள்ளும் நாண்கள் ஒவ்வொன்றின் வெட்டுத்துண்டுகளின் பெருக்கற்பலன்கள் சமம்)
PI×QI=2Rr-----( (1)-ன் படி)
(R+d)(Rd)=2Rr --------(d -சுற்றுவட்ட மையத்திற்கும் உள்வட்ட மையத்திற்கும் இடையேயுள்ள தூரம்.)
d2=R(R2r). ---------(தேற்ற முடிவு நிறுவப்படுகிறது.)

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வெளி இணைப்புகள்