அல்ஃபா சிதைவு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search
ஆல்பா சிதைவு

வார்ப்புரு:அணுக்கருவியல் ஆல்ஃபா சிதைவு அல்லது α-சிதைவு (alpha decay) என்பது ஒரு அணுக்கருவிலிருந்து ஒரு ஆல்ஃபா துகள் வெளியேற்றப்படும் ஒரு வகை கதிரியக்கச் சிதைவு ஆகும். இந்தச் சிதைவுக்கு முன்பிருந்த தனிமம் இரண்டு அணுவெண்ணும் நான்கு திணிவெண்ணும் குறைக்கப்பட்டு ஒரு புதிய தனிமாக மாற்றமடைகிறது. ஆல்ஃபா துகளானது ஹீலியம்-4 அணுவின் அணுக்கருவை ஒத்தது. ஆல்ஃபா துகளின் மின்னூட்டம் +2 e, நிறை 4 டா அணு நிறை அலகு.[1][note 1][2]

எடுத்துக்காட்டாக, 29238U சிதைவுறும் போது α துகளை உமிழ்ந்து தோரியமாக(thorium) மாறுகிறது.

29238U29034Th+24He2+,

இது பொதுவாக இவ்வாறு எழுதப்படும்:

238U234Th+α.

ஆல்ஃபா சிதைவு பொதுவாக கனமான அணுக்கருக்களில் நிகழ்கிறது. கோட்பாட்டளவில், ஒவ்வொரு அணுக்கருனிக்குமான ஒட்டுமொத்த பிணைப்பாற்றல் அதிகமாக இல்லாமலும், அதனால் அணுக்கருக்கள் தன்னிச்சையான பிளவு-வகை செயல்முறைகள் நோக்கில் நிலையற்றதாகவும் உள்ள நிக்கலை (தனிமம் 28) விட கனமான கருக்களில் மட்டுமே நிகழும். நடைமுறையில், இந்தச் சிதைவுமுறை நிக்கலை( nickel) விட வெகுகனமான அணுக்கருக்களில் மட்டுமே அறியப்படுகிறது. அறியப்பட்ட பாரம் குறைந்த ஆல்ஃபா உமிழ்ப்பான்கள் டெல்லூரியத்தின் (தனிமம் 52) மென்மையான ஓரிடத்தான்கள் (நிறைவு எண்கள் 104-109) ஆகும். விதிவிலக்காக, பெரிலியம்-8 இரண்டு ஆல்ஃபா துகள்களாகச் சிதைகிறது.

குறிப்புகள்

வார்ப்புரு:Reflist

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist


பிழை காட்டு: <ref> tags exist for a group named "note", but no corresponding <references group="note"/> tag was found

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=அல்ஃபா_சிதைவு&oldid=108" இலிருந்து மீள்விக்கப்பட்டது