ஆக்டினியம்(III) நைட்ரேட்டு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox ஆக்டினியம்(III) நைட்ரேட்டு (Actinium(III) nitrate) என்பது Ac(NO3)3என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆக்டினியத்தின் நைட்ரேட்டு உப்பான இச்சேர்மம் வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. தண்ணீரில் நன்கு கரையும்.[1]

தயாரிப்பு

ஆக்டினியம் அல்லது ஆக்டினியம் ஐதராக்சைடை நைட்ரிக் அமிலத்தில் கரைத்து ஆக்டினியம்(III) நைட்ரேட்டு தயாரிக்கப்படுகிறது.

𝖠𝖼(𝖮𝖧)𝟥+𝟥𝖧𝖭𝖮𝟥  𝖠𝖼(𝖭𝖮𝟥)𝟥+𝟥𝖧𝟤𝖮

பண்புகள்

ஆக்டினியம்(III) நைட்ரேட்டை 600 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடாக்கினால் சிதைவடைகிறது.

𝟦𝖠𝖼(𝖭𝖮𝟥)𝟥=𝟤𝖠𝖼𝟤𝖮𝟥+𝟣𝟤𝖭𝖮𝟤+𝟥𝖮𝟤

நீரிய கரைசல்களில் இருந்து வீழ்படிவாக்கல் மூலம் கரையாத ஆக்டினியம் சேர்மங்களைப் பெற இந்த உப்பு Ac3+அயனிகளின் ஆதாரமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வார்ப்புரு:ஆக்டினியம் சேர்மங்கள் வார்ப்புரு:நைத்திரேட்டுகள்