ஆக்டினியம் புளோரைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

ஆக்டினியம் புளோரைடு (Actinium fluoride) என்பது AcF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆக்டினியமும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு

கரைசல் அல்லது திண்மநிலை வினையின் வழியாக ஆக்டினியம் புளோரைடு தயாரிக்கப்படுகிறது. முதல் வழிமுறையில் ஆக்டினியம் ஐதராக்சைடு ஐதரோபுளோரிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தப்படுவதனால் விளைபொருள் வீழ்படிவாக்கப்படுகிறது :[1]

Ac(OH)3+ 3 HFAcF3+ 3 H2O.

திண்மநிலை வினையில் ஆக்டினியம் உலோகம் ஐதரசன் புளோரைடு வாயுவுடன் சேர்த்து பிளாட்டினப் புடக்குவளையில் வைத்து 700 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் ஆக்டினியம் புளோரைடு உருவாகிறது [2][3].

பண்புகள்

ஆக்டினியம் புளோரைடு வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது. 900-1000 பாகை செல்சியசு வெப்பநிலையில் அமோனியாவுடன் வினைபுரிந்து ஆக்டினியம் ஆக்சி புளோரைடைத் தருகிறது.

AcF3+2 NH3+H2OAcOF+2 NH4F

இலந்தனம் புளோரைடை காற்றில் சூடுபடுத்தினாலேயே எளிமையாக இலந்தனம் ஆக்சிபுளோரைடு உருவாகிறது. ஆனால் மேற்கண்ட முறையில் சூடாக்கினால் ஆக்டினியம் புளோரைடு உருகிவிடுகிறது. ஆக்டினியம் ஆக்சி புளோரைடு உருவாவதில்லை.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வார்ப்புரு:ஆக்டினியம் சேர்மங்கள் வார்ப்புரு:புளோரின் சேர்மங்கள்

  1. வார்ப்புரு:Cite book
  2. வார்ப்புரு:Cite journal
  3. Meyer, Gerd and Morss, Lester R. (1991) Synthesis of lanthanide and actinide compounds. Springer. வார்ப்புரு:ISBN. pp. 87–88
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=ஆக்டினியம்_புளோரைடு&oldid=1380" இலிருந்து மீள்விக்கப்பட்டது