ஆணித் தள்ளுகை
ஆணித் தள்ளுகை அல்லது குழலாசன அழுத்தம் (ஆங்கிலம்: Bolt thrust, breech pressure) என்பது, எறியம் சுடப்படுகையில், உந்து வாயுக்களால், இயங்குமுறையின் ஆணி அல்லது குழலாசனத்தின் மீது செலுத்தப்படும் பின்னோக்கிய விசையின் அளவை விவரிக்கும் ஒரு சொல் ஆகும். இச்சொல் அக எறியியல் மற்றும் (சிறிய ரக அல்லது பீரங்கி ரக) சுடுகலன்களில் பிரயோக்கிக்கப்படும். இவ்வாறு செலுத்தப்படும் விசை ஆனது, அளவும் (Magnitude), திசையும் கொண்டிருப்பதால்; இது ஒரு திசையன் பொருள் ஆகிறது.
ஆயுத வடிவமைப்பில் ஆணித் தள்ளுகை ஒரு முக்கிய காரணி ஆகும். எந்த அளவிற்கு ஆணித் தள்ளுகை அதிகம் ஆகிறதோ, அந்த அளவை தாக்குப்பிடிக்கும் வலிமையை பூட்டும் இயங்குநுட்பம் கொண்டிருக்க வேண்டும்.
பின்னுதைப்பின் அளவை கண்டறிய, ஆணித் தள்ளுகை பயன்படாது.
ஆணித் தள்ளுகை கணிப்பு
அடிப்படையான கணிதத்தால், ஒரு குறிப்பிட்ட வெடிபொதியின் ஆணித் தள்ளுகையை துல்லியமாக கணக்கிடலாம்.
சூத்திரம்
இங்கே:
- Fbolt = ஆணித் தள்ளுகை அளவு
- Pmax = வெடிபொதியால் அறையில் ஏற்படும் உச்சபட்ச அழுத்தம்
- Ainternal = உந்துபொருள் எரிவதால் உண்டாகும் வாயுக்களின் அழுத்தத்தை தாங்கும் (பொதியுறைத் தலையின்) உட் பரப்பளவு
பொதியுறைத் தலைகளும், அறைகளும் பொதுவாக வட்டமாக இருக்கும். ஒரு வட்டத்தின் பரப்பளவு:
இங்கே:
- π ≈ 3.1416
- r = வட்டத்தின் ஆரையம்
இதையே, வட்டத்தின் விட்டம் d-ஐ கொண்டு எழுதினால்
இதில் ஒரு நடைமுறை சிக்கல் உள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட பொதியுறையை சேதமாக்காமல், அதன் தலையின் உள் விட்டத்தை அளப்பது அவ்வளவு எளிதல்ல.
ஆணித் தள்ளுகையை உத்தேசிப்பதற்கான செயல்முறை
பொதியுறைத் தலையின் உள் விட்டத்திற்கு பதிலாக, அதன் வெளி விட்டத்தை இடுக்குமானி அல்லது திருகு அளவி போன்றவற்றைக் கொண்டு அளந்து, ஆணித் தள்ளுகையை கணிக்க பிரயோகிக்கலாம்.
அடிப்படையான கணக்கிடும் முறை கிட்டத்தட்ட ஒன்று தான், ஆனால் இப்போது சிறிய உள் பரப்பளவுக்கு பதிலாக, அதைவிட பெரிய வெளிப் பரப்பளவை கணக்கில் வைத்தால்,
இங்கே:
- Fbolt = ஆணித் தள்ளுகை அளவு
- Pmax = வெடிபொதியால் அறையில் ஏற்படும் உச்சபட்ச அழுத்தம்
- Aexternal = பொதியுறைத் தலையின் வெளிப் பரப்பளவு
பல்வேறு கைத்துப்பாக்கி/சுழல்-கைத்துப்பாக்கி வெடிபொதிகளின் உத்தேச ஆணித் தள்ளுகைகள்
| வெடிபொதிகள் | P1 விட்டம் (மிமீ) | Aexternal (செமீ2) | Pmax (பார்) | Fbolt (கிலோகிராம்-விசை) | Fbolt |
|---|---|---|---|---|---|
| .22 லாங் ரைஃபிள் | 5.74 | 0.2587 | 1,650 | 427 | வார்ப்புரு:Convert |
| 9×19 மிமீ பாராபெல்லம் | 9.93 | 0.7744 | 2,350 | 1,820 | வார்ப்புரு:Convert |
| .357 எஸ்.ஐ.ஜி. | 10.77 | 0.9110 | 3,050 | 2,779 | வார்ப்புரு:Convert |
| .380 ஏ.சி.பீ. | 9.70 | 0.7390 | 1,500 | 1,130 | வார்ப்புரு:Convert |
| .40 எஸ்&டபள்யூ | 10.77 | 0.9110 | 2,250 | 2,050 | வார்ப்புரு:Convert |
| 10 மிமீ ஆட்டோ | 10.81 | 0.9178 | 2,300 | 2,111 | வார்ப்புரு:Convert |
| .45 ஏ.சி.பீ. | 12.09 | 1.1671 | 1,300 | 1,517 | வார்ப்புரு:Convert |
| .454 காசல் | 12.13 | 1.1556 | 3,900 | 4,507 | வார்ப்புரு:Convert |
| .500 எஸ்&டபள்யூ மேக்னம் | 13.46 | 1.4229 | 4,270 | 6,076 | வார்ப்புரு:Convert |
P1 (பொதியுறையின் அடித்தட்டு) விட்டம்
பல்வேறு புரிதுமுக்கி வெடிபொதிகளின் உத்தேச ஆணித் தள்ளுகைகள்
P1 (பொதியுறையின் அடித்தட்டு) விட்டம்