ஆர்த்தோ-டையனிசிடின்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox ஆர்த்தோ-டையனிசிடின் (o-Dianisidine) என்பது [(CH3O)(H2N)C6H3]2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்று அல்லது வெண்மை நிறத்துடன் ஆர்த்தோ-டையனிசிடின் காணப்படுகிறது. ஆர்த்தோ-அனிசிடினிலிருந்து பென்சிடின் மறுசீராக்க வினையின் வழியாக வருவிக்கப்படும் வழிப்பெறுதியான இது ஒர் இருசெயல்பாட்டு சேர்மம் என வகைப்படுத்தப்படுகிறது.

பிசு(டையசோனியம்) வழிப்பெறுதியாக உருவாதல் மூலமாக சில அசோ சாயங்கள் தயாரிப்பிற்கான முன்னோடிச் சேர்மமாக ஆர்த்தோ-டையனிசிடின் கருதப்படுகிறது. பிசு(டையசோனியம்) வழிப்பெறுதி பல்வேறு அரோமாட்டிக் சேர்மங்களுடன் இணைக்கப்படக்கூடியதாகும். நேரடி நீலம் 1,15, 22, 84 மற்றும் 98 உள்ளிட்ட வர்த்தக முக்கியத்துவம் கொண்ட சாயங்கள் ஆர்த்தோ-டையனிசிடினிலிருந்து வழிப்பெறுதிகளாக தயாரிக்கப்படுகின்றன. [1]

ஆய்வகத்தில் பெராக்சிடேசு நொதியின் மதிப்பிடுதல் செயல்முறையிலும் ஆர்த்தோ-டையனிசிடின் பயனாகிறது. இதற்கான வேதிவினை கீழ்கண்டவாறு அமைகிறது.

ROORA+2eAelectrondonor+2HA+PeroxidaseROH+RAOH

இங்குள்ள ROOR' ஐதரசன் பெராக்சைடு மற்றும் எலக்ட்ரான் வழங்கி ஆர்த்தோ-டையனிசிடின் ஆகும்.

நேரடி நீலம் 1- ஆர்த்தோ-டையனிசிடினிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வர்த்தகச் சாயம்.

பாதுகாப்பு

மற்ற பென்சிடின் வழிப்பெறுதிகலைப் போல ஆர்த்தோ-டையனிசிடினும் முறையாக முறைப்படுத்தப்பட வேண்டிய ஒரு வேதிப்பொருளாகும். [2] உயிர்வேதியியலில் பெராக்சைடுகளை ஆராயும் வினையாக்கியாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=ஆர்த்தோ-டையனிசிடின்&oldid=1455" இலிருந்து மீள்விக்கப்பட்டது