ஆவியாதலின் சிதறம்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

ஆவியாதலின் சிதறம் (Entropy of vaporization) என்பது திரவம் ஆவியாகும் போது அதிகரிக்கும் சிதறம் ஆகும். இது எப்போதும் நேர்க்குறியைப் பெறுகிறது. ஏனெனில் திரவத்திலிருந்து சிறிய பரும அளவு திரவம் நீராவி அல்லது வளிமமாக மாறும் போது மிக அதிக இடத்தை நிரப்புவதால் ஒழுங்கற்ற தன்மையின் அளவு (Degree of disorder) அதிகரிக்கிறது. திட்ட வெப்ப அழுத்தத்தில் Po = 1 பார், அதன் மதிப்பு ΔSovap என்று குறிக்கப்படுகிறது, மற்றும் அதன் அலகு J mol−1 K−1 ஆகும்.

ஆவியாதல் போன்ற நிலை மாற்றங்களில், இரு நிலைகளும் சமமாக இருக்கும்போது கிப்சின் ஆற்றல் வேறுபாடு சுழியாகும்.[1]

ΔGvap=ΔHvapTvap×ΔSvap=0,

இங்கு, ΔHvap என்பது ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம் ஆகும். இது ஒரு வெப்ப இயக்கவியல் சமன்பாடு என்பதால், T என்ற குறியீடு கெல்வின் (K) முழுமையான வெப்ப இயக்க வெப்பநிலையை குறிக்கிறது. இதனால் ஆவியாதலின் சிதறம் ஆவியாக்கும் வெப்பநிலையை கொதி வெப்பநிலையால் வகுத்தால் கிடைக்கும் அளவிற்கு சமமாக இருக்கும்.[2] [3]

ΔSvap=ΔHvapTvap.

இட்றௌட்டனின் விதிப்படி பல திரவங்களின் ஆவியாதலின் சிதறம் திடவெப்ப அழுத்தத்தில் 85 இலிருந்து 88 J mol−1 K−1 இற்குள் உள்ளது.[4]

மேற்கோள்கள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=ஆவியாதலின்_சிதறம்&oldid=1292" இலிருந்து மீள்விக்கப்பட்டது