இசுட்ரோன்சியம் பாசுபைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

இசுட்ரோன்சியம் பாசுபைடு (Strontium phosphide) என்பது Sr3P2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுட்ரோன்சியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2] கருப்பு நிற படிகங்களாக இது தோற்றமளிக்கிறது.[3]

தயாரிப்பு

ஒரு வில் உலையில் இசுட்ரோன்சியம் பாசுபேட்டுடன் புகைக்கரியைச் சேர்த்து சூடாக்கினால் இசுட்ரோன்சியம் பாசுபைடு உருவாகிறது.

SrA3(POA4)A2+8CSrA3PA2+8CO

இசுட்ரோன்சியத்துடன் சிவப்பு பாசுபரசை சேர்த்து சூடாக்கினாலும் இசுட்ரோன்சியம் பாசுபைடு கிடைக்கும்:[3]

3Sr+2PSrA3PA2

இயற்பியல் பண்புகள்

இசுட்ரோன்சியம் பாசுபைடு கருப்பு நிறத்தில் படிகங்களை உருவாக்குகிறது.[3]

வெப்பத்தில் நிலைப்புத்தன்மை கொண்டது என்றாலும் உயர் வெப்பநிலையில் உருகும்.

ஈரமாக இருக்கும்போது ஆபத்தானது. நச்சுப் பண்பு கொண்டதாகவும் உள்ளது.[4]

வேதிப் பண்புகள்

தண்ணீருடன் வினைபுரியும் போது சிதைவடைந்து பாசுபீன் வாயுவை வெளிவிடுகிறது:[3]

SrA3PA2+2HA2O3Sr(OH)A2+2PHA3

அமிலங்களுடன் வினைபுரிந்து தொடர்புடைய உப்புகளைக் கொடுக்கிறது. இவ்வினையிலும் பாசுபீன் வாயு வெளியாகிறது.

SrA3PA2+6HCl3SrClA2+2PHA3

பயன்கள்

இசுட்ரோன்சியம் பாசுபைடு மிகவும் வினைத்திறன் கொண்ட ஒரு பொருளாகும். வேதி வினைகளில் ஒரு வினையாக்கியாக இது பயன்படுத்தப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:இசுட்ரோன்சியம் சேர்மங்கள்