இட்டெர்பியம்(II) அயோடைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

இட்டெர்பியம்(II) அயோடைடு (Ytterbium(II) iodide) என்பது YbI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இட்டெர்பியத்தின் அயோடைடு உப்பான இது மஞ்சள் நிறத்தில் திண்மநிலையில் காணப்படுகிறது.

தயாரிப்பு

இட்டெர்பியம்(III) அயோடைடை சூடுபடுத்தினால் இட்டெர்பியம்(II) அயோடைடு உருவாகும்.:[1]

2 YbI3 Δ T 2 YbI2 + I2

டெட்ரா ஐதரோபியூரானில் கரைக்கப்பட்ட 1,2-ஈரயோடோயீத்தேனுடன் உலோக இட்டெர்பியத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமும் இதைத் தயாரிக்கலாம்:[2]

Yb + ICH2CH2I THF YbI2 + H2C=CH2

இவ்வினை அறை வெப்பநிலையில் நடந்தாலும், வினையாக்கிகளின் உணர்திறன் காரணமாக நீரற்ற மற்றும் மந்த வாயுவின் கீழ் இவ்வினை நடைபெற வேண்டியது அவசியமாகும். இல்லையெனில், ஆக்சிசன் இருந்தால் இட்டெர்பியம்(III) அயனிக்கு விரைவான ஆக்சிசனேற்றம் நடைபெறுகிறது. பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக கரைசலின் நிறத்தை மாறுவதன் மூலம் இவ்விரைவான ஆக்சிசனேற்றம் பார்வைக்கும் அடையாளமாகும்.

பண்புகள்

இட்டெர்பியம்(II) அயோடைடு மஞ்சள் நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது. காற்று மற்றும் ஈரப்பதத்திற்கு மிகவும் உணர்திறன் கொண்டது. இதனால் இட்டெர்பியம்(III) அயோடைடாக விரைவில் ஆக்சிசனேற்றம் அடைந்து விடும். இது தண்ணீருடன் வினைபுரிந்து ஐதரசன் வாயுவையும் அடிப்படை அயோடைடுகளை உருவாக்குகிறது. மேலும் அமிலங்களுடன் தீவிரமாக வினையில் ஈடுபடுகிறது.[1] சுமார் 800 பாகை செல்சியசு வெப்பநிலையில், கண்ணாடிச் சுவர்களில் இட்டெர்பியம்(II) அயோடைடின் மஞ்சள் நிறப் பதங்கமாதலை காணமுடியும். எனவே எனவே இட்டெர்பியம்(II) அயோடைடின் உருகு நிலையை துல்லியமற்றதாகவே தீர்மானிக்க முடியும்.[1][3]

சமாரியம்(II) அயோடைடு (SmI2), போலவே இட்டெர்பியம்(II) அயோடைடும் ஒரு வினையாக்கியாக கரிம வேதியியல் வினைகளில் பயன்படுத்தப்படுகிறது. [2]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

மேலும் படிக்க

  1. 1.0 1.1 1.2 வார்ப்புரு:Cite journal
  2. 2.0 2.1 வார்ப்புரு:Cite journal
  3. Gmelins Handbuch der anorganischen Chemie, System Nr. 39, Band C 6, S. 199–200.