இட்டெர்பியம் பாசுபைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox இட்டெர்பியம் பாசுபைடு (Ytterbium phosphide) என்பது YbP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. [1] இட்டெர்பியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இட்டெர்பியத்தின் பாசுபைடு சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். [2][3]

தயாரிப்பு

இட்டெர்பியமும் பாசுபீனும் திரவ அமோனியாவில் வினைபுரிந்து Yb(PH2)2•5NH3 என்ற அணைவுச் சேர்மம் உருவாகிறது. இதை இட்டெர்பியம் பாசுபைடாக சிதைக்க முடியும்:[4]

Yb(PHA2)A25NHA3Yb(PHA2)A2+5NHA3
2Yb(PHA2)A2YbP+2PHA3+HA2

இயற்பியல் பண்புகள்

550 பாகை செல்சியசு வெப்பநிலையில் இட்டெர்பியம் பாசுபைடு சிதைவடைகிறது.

3YbPYbA3PA2+P

ஐதரோகுளோரிக் அமிலம், இராச திராவகம், நைட்ரிக் அமிலம் போன்றவற்றில் இது கரையும். இட்டெர்பியம் பாசுபைடு கனசதுர திட்டத்தில் Fm3m என்ற இடக்குழுவில் கருப்பு நிற படிகங்களாக உருவாகிறது. [5]

பயன்கள்

உயர் ஆற்றல் நிலை, உயர் அலைவரிசை பயன்பாடுகள், சீரொளி மற்றும் இதர ஒளியியல் இருமுனையங்களில் இட்டெர்பியம் பாசுபைடு ஒரு குறைக்கடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. [1]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வார்ப்புரு:இட்டெர்பியம் சேர்மங்கள் வார்ப்புரு:பாசுபரசு சேர்மங்கள் வார்ப்புரு:பாசுபைடுகள்