இட்ரியம் அயோடைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox இட்ரியம் அயோடைடு (Yttrium iodide) என்பது YI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இட்ரியமும் ஐதரயோடிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது.[1][2] நிறமற்ற படிகங்களாக உருவாகும் இது தண்ணீரில் கரையும்.

தயாரிப்பு

இட்ரியத்துடன் அயோடினைச் சேர்த்து மந்தவாயுச் சூழலில் சூடுபடுத்தினால் இட்ரியம் அயோடைடு கிடைக்கும்.

2Y+3IA22YIA3

இட்ரியம் ஆக்சைடுடன் அமோனியம் அயோடைடு சேர்த்து சூடுபடுத்தினாலும் இட்ரியம் அயோடைடு கிடைக்கும்:

YA2OA3+6NHA4I2YIA3+6NHA3+3HA2O

இட்ரியம் ஆக்சைடு அல்லது இட்ரியம் ஐதராக்சைடை ஐதரயோடிக் அமிலத்துடன் வினைபுரியச் செய்வதன் மூலமும் இட்ரியம் அயோடைடைத் தயாரிக்கலாம்.

இயற்பியல் பண்புகள்

இட்ரியம் அயோடைடு நிறமற்ற செதில் போன்ற படிகங்களாக உருவாகிறது. BiI3 கட்டமைப்பின் வகையை இதன் படிக அமைப்பும் கொண்டிருக்கிறது.[3]

தண்ணீர் மற்றும் எத்தனாலில் நன்றாக கரைகிறது. ஈரெத்தில் ஈதரில் கரையாது.

மூன்று மற்றும் அறுநீரேற்றுகளாகவும் இட்ரியம் அயோடைடு தோன்றுகிறது.[4]

பயன்

தாழ் வெப்பநிலைகளில் இட்ரியம் பேரியம் தாமிர ஆக்சைடு மீக்கடத்தி வேதிப் பொருட்களை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக இட்ரியம் அயோடைடு பயன்படுத்தப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:இட்ரியம் சேர்மங்கள் வார்ப்புரு:அயோடைடுகள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=இட்ரியம்_அயோடைடு&oldid=1574" இலிருந்து மீள்விக்கப்பட்டது