இண்டியம் பெர்குளோரேட்டு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

இண்டியம் பெர்குளோரேட்டு (Indium perchlorate) என்பது In(ClO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] பெர்குளோரிக்கு அமிலத்தின் இண்டியம் உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது.[2][3]

தயாரிப்பு

இண்டியம்(III) ஐதராக்சைடை பெர்குளோரிக்கு அமிலத்தில் கரைத்தால் இண்டியம் பெர்குளோரேட்டு உருவாகும்.

In(OH)A3+3HClOA4In(ClOA4)A3+3HA2O

இயற்பியல் பண்புகள்

இண்டியம்(III) பெர்குளோரேட்டு நிறமற்ற படிகங்களாக உருவாகிறது. இது தண்ணீர் மற்றும் எத்தனாலில் கரையும். இச்சேர்மம் In(ClO4)3•8H2O என்ற ஒரு படிக நீரேற்றை உருவாக்குகிறது. 80 °செல்சியசு வெப்பநிலையில் தன் சொந்த படிகமயமாக்கல் நீரில் இது உருகும்.[4] மேலும் இந்த எண்ணீரேற்று உப்பு எளிதில் எத்தனால் மற்றும் அசிட்டிக் அமிலத்தில் கரையும்.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist