இரும்பு(II) கார்பனேட்டு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

இரும்பு(II) கார்பனேட்டு (Iron(II) carbonate) என்பது FeCO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரசு கார்பனேட்டு என்ற பெயராலும் அறியப்படுகிறது. இயற்கையில் சிடரைட்டு என்ற கனிமமாக இரும்பு(II) கார்பனேட்டு தோன்றுகிறது. சாதாரண சுற்றுப்புறச் சூழ்நிலையில் இது Fe2+ நேர்மின் அயனியும் CO32− எதிர்மின் அயனியும் கொண்ட பச்சை-பழுப்பு நிறத்தில் திண்மநிலை அயனிச் சேர்மமாகக் காணப்படுகிறது.[1]

தயாரிப்பு

இரும்பு(II) குளோரைடு மற்றும் சோடியம் கார்பனேட்டு போன்ற இரண்டு அயனிகள் சேர்ந்து வினைபுரிவதால் இரும்பு(II) கார்பனேட்டு உருவாகிறது.

வார்ப்புரு:Chem + வார்ப்புரு:Chemவார்ப்புரு:Chem + 2வார்ப்புரு:Chem

இரும்பு(II) உப்பின் கரைசலான இரும்பு(II) பெர்குளோரேட்டு கரைசலுடன் சோடியம் பைகார்பனேட்டுடன் கரைசலைச் சேர்த்து கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதன் மூலமும் இரும்பு(II) கார்பனேட்டைத் தயாரிக்கலாம் :[2]

வார்ப்புரு:Chem(வார்ப்புரு:Chem)2 + 2வார்ப்புரு:Chemவார்ப்புரு:Chem + 2வார்ப்புரு:Chem + வார்ப்புரு:Chem + வார்ப்புரு:Chem

செல் மற்றும் பிறர் இந்த வினையைப் பயன்படுத்தினர். ஆனால் Fe(ClO4)2)n சேற்மத்திற்குப் பதிலாக இதை தயாரிக்க வார்ப்புரு:Chem சேர்மத்தை 0.2 மோலார் கரைசலைப் பயன்படுத்தினர்.[3]

கரைசலிலிருந்து ஆக்சிசனை தவிர்க்க வினையை கவனமாக கையாளவேண்டும். ஏனெனில் Fe2+ அயனி எளிதாக Fe3+ ஆக ஆக்சிசனேற்றப்படுகிறது. குறிப்பாக காடித்தன்மை எண் 6.0 மதிப்புக்கு மேல் சென்றால் இம்மாற்றம் நிகழும்.[2]

எஃகு அல்லது இரும்பு மேற்பரப்பில் கார்பன் டை ஆக்சைட்டின் கரைசல்களுக்கு வெளிப்படும் போது இரும்பு கார்பனேட்டு நேரடியாக செதில்களாக உருவாகிறது:[4]

வார்ப்புரு:Chem + வார்ப்புரு:Chem + வார்ப்புரு:Chemவார்ப்புரு:Chem + வார்ப்புரு:Chem

பண்புகள்

வெப்பநிலையுடன் நீரில் கரையும் தன்மையின் சார்பு வெய் சன் மற்றும் பிறரால் தீர்மானிக்கப்பட்டது.

logK𝑠𝑝=59.34980.041377T2.1963/T+24.5724logT+2.518I0.657I,

இங்குள்ள் T என்பது கெல்வின்களின் முழுமையான வெப்பநிலையையும் I என்பது திரவத்தின் அயனி வலிமையையும் குறிக்கின்றன. [4]

இரும்பு கார்பனேட்டு சுமார் 500-600 ° செல்சியசு வெப்பநிலையில் (773-873 கெல்வின்) சிதைகிறது.[5]

பயன்கள்

இரும்பு கார்பனேட்டு இரத்த சோகைக்கு சிகிச்சையளிப்பதற்கு இரும்பு உணவு நிரப்பியாக பயன்படுத்தப்படுகிறது. [6]

நச்சுத் தன்மை

இரும்பு கார்பனேட் சற்று நச்சுத்தன்மை கொண்டது; 0.5 முதல் 5 கிராம்/கிலோ (70 கிலோ எடையுள்ள நபருக்கு 35 முதல் 350 கிராம் வரை) வாய்வழி மரணமடையும் வாய்ப்பு உள்ளது.[7]

இரும்பு(III) கார்பனேட்டு

இரும்பு(II) கார்பனேட் போலல்லாமல், இரும்பு(III) கார்பனேட் தனிமைப்படுத்தப்படவில்லை. நீரிய பெரிக் அயனிகள் மற்றும் கார்பனேட்டு அயனிகளின் வினை புரிவதன் மூலம் இரும்பு(III) கார்பனேட்டுக்குப் பதிலாக இரும்பு(III) ஆக்சைடைடு உருவானது. கார்பன் டை ஆக்சைடு அல்லது பைகார்பனேட்டு வெளியிடப்பட்டது.[8]

மேற்கோள்கள்

  1. (1995): "Kirk-Othmer Encyclopedia of Chemical Technology". 4th ed. Volume 1.
  2. 2.0 2.1 Philip C. Singer and Werner Stumm (1970): "The solubility of ferrous iron in carbonate-bearing waters". Journal of the American Water Works Association, volume 62, issue 3, pages 198-202. https://www.jstor.org/stable/41266171
  3. Ozlem Sel, A.V. Radha, Knud Dideriksen, and Alexandra Navrotsky (2012): "Amorphous iron (II) carbonate: Crystallization energetics and comparison to other carbonate minerals related to CO2 sequestration". Geochimica et Cosmochimica Acta, volume 87, issue 15, pages 61–68. வார்ப்புரு:Doi
  4. 4.0 4.1 Wei Sun (2009): "Kinetics of iron carbonate and iron sulfide scale formation in CO2/H2S corrosion". PhD Thesis, Ohio University.
  5. வார்ப்புரு:Cite journal
  6. வார்ப்புரு:Cite web
  7. Gosselin, R.E., H.C. Hodge, R.P. Smith, and M.N. Gleason. Clinical Toxicology of Commercial Products. 4th ed. Baltimore: Williams and Wilkins, 1976., p. II-97
  8. வார்ப்புரு:Cite book

பிழை காட்டு: <ref> tag with name "patty" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "lide" defined in <references> is not used in prior text.