இருள் எண்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

இருள் எண்

ஒரூஉ எண்
முதல் 16 ஒரூஉ எண்கள் மற்றும் இருள் எண்கள்

எண் கோட்பாட்டில், இருள் எண் (evil number) என்பது அதனது இரும எண் வடிவில் இரட்டை எண்ணிக்கையிலான ஒன்றுகளை ('1') கொண்டதொரு நேர்ம முழுவெண்ணாகும்[1] . இருள் எண்களாக இல்லாத எதிர்மமல்லா முழுவெண்கள் ஒரூஉ எண்களென அழைக்கப்படுகின்றன.

கணினி அறிவியலில் ஓர் இருள் எண்ணானது இரட்டை நிகரியுடையதாகக் கொள்ளப்படுகிறது.

எடுத்துக்காட்டுகள்

துவக்க இருள் எண்கள்:

0, 3, 5, 6, 9, 10, 12, 15, 17, 18, 20, 23, 24, 27, 29, 30, 33, 34, 36, 39 ...[1]

சமமான கூட்டுத்தொகைகள்

ஒரூஉ எண்களாக இல்லாத எதிர்மமில்லா முழுவெண்கள் "இருள் எண்"களென அழைக்கப்படுகிறன. ஒரூஉ எண்களும் இருள் எண்களும் சேர்ந்து எதிர்மமில்லா முழுவெண்களை சோடிவாரியான கூட்டுத்தொகையுடைய சமமான இரு பல்கணங்களாகப் பிரிக்கின்றன. இது தனித்துவமான பிரிப்பாக இருக்கும்.[[2] 0 to 2k1k, வரையிலான நேர்ம முழு எண்களின் இவ்வாறான பிரிப்பானது , k அடுக்குகள் வரை சமமான கூட்டுத்தொகையுடைய எண்களின் கணங்களைக் காண்பதற்கு உதவுகிறது.[3]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=இருள்_எண்&oldid=1742" இலிருந்து மீள்விக்கப்பட்டது