இரேனியம்(VII) சல்பைடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

இரேனியம்(VII) சல்பைடு (Rhenium(VII) sulfide) என்பது Re2S7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெர் இரேனேட்டு (ReO4) மற்றும் ஐதரசன் சல்பைடு (H2S) முதலியன 4N ஐதரோ குளோரிக் அமிலத்தில் வினைபுரியும் போது இரேனியம்(VII) சல்பைடு உருவாகிறது[1].

தொகுப்பு வினை

இரேனியமும் கந்தகமும் நேரடியாக வினைபுரியும் பொழுது இரேனியம்(VII) சல்பைடு உருவாகிறது.

2Re+7S Δ Re2S7

இரேனியம்(VII) ஆக்சைடுடன் ஐதரசன் சல்பைடு சேர்த்து சூடுபடுத்தும் போதும் இரேனியம்(VII) சல்பைடு உருவாகிறது.

Re2O7+7H2S Δ Re2S7+7H2O

வினைகள்

இரேனியம்(VII) சல்பைடை வெற்றிடத்தில் சூடுபடுத்தும் போது சிதைவடைகிறது.

Re2S7 600oC 2ReS2+3S

மேலும் இச்சேர்மத்தை காற்றில் சூடுபடுத்தினால ஆக்சைடைக் கொடுக்கிறது

2Re2S7+21O2 Δ 2Re2O7+14SO2

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வார்ப்புரு:இரேனியம் சேர்மங்கள் வார்ப்புரு:சல்பைடுகள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=இரேனியம்(VII)_சல்பைடு&oldid=1139" இலிருந்து மீள்விக்கப்பட்டது