இலந்தனம்(III) நைட்ரேட்டு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

இலந்தனம்(III) நைட்ரேட்டு (Lanthanum(III) nitrate) La(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் வேதியியல் சேர்மமாகும். இது நீரில் கரையும். 499 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தும் போது இலந்தனம்(III) நைட்ரேட்டு சேர்மம் இலந்தனம் ஆக்சைடு, நைட்ரிக் ஆக்சைடு மற்றும் ஆக்சிசன் என சிதைவடைகிறது.[1]

பயன்கள்

இது இலந்தனம் பெர்மாங்கனேட்டை மின் வேதியியல் முறையில் தொகுப்பதற்கான மூலப் பொருளாகவும், இலந்தனம் ஆக்சிசல்பைடை உருவாக்குவதற்கான ஒரு தொடக்க இரசாயனப் பொருளாகவும் இது பயன்படுகிறது. ஒளிரும் விளக்குகளில் பயன்படுத்துவதற்கு சாத்தியமான ஒரு பொருளாகவும் இது கருதப்படுகிறது. [2]

தயாரிப்பு

இலந்தனம் ஆக்சைடுடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இலந்தனம்(III) நைட்ரேட்டு தயாரிக்கப்படுகிறது. உடன் விளைபொருளாக தண்ணீர் கிடைக்கிறது.

LaA2OA3+6HNOA32La(NOA3)A3+3HA2O

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:இலந்தனம் சேர்மங்கள்