இலந்தனம் ஆக்சலேட்டு
இலந்தனம் ஆக்சலேட்டு (Lanthanum oxalate) La2(CO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும்.[1][2] இலந்தனம் உலோகமும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் இலந்தனம் ஆக்சலேட்டு உருவாகிறது.
தயாரிப்பு
அதிகப்படியான ஆக்சாலிக் அமிலத்துடன் கரையக்கூடிய லந்தனம் நைட்ரேட்டு சேர்த்து வினைபுரியச் செய்தால் இலந்தனம் ஆக்சலேட்டு உருவாகிறது.
மேலும், ஆக்சாலிக் அமிலத்துடன் லந்தனம் குளோரைடை வினைபுரியச் செய்தாலும் இது உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்
இலந்தனம்(III) ஆக்சலேட்டு நிறமற்ற படிகங்களாக உருவாக்கிறது. தண்ணீரில் மிகக்குறைவாகக் கரையக்கூடிய பண்பைக் கொண்டுள்ளது.[3]
பல்வேறு வகையான படிகநீரேற்றுகளாக இலந்தனம் ஆக்சலேட்டு உருவாகிறது. வார்ப்புரு:Chem•nவார்ப்புரு:Chem, இங்கு n = 1, 2, 3, 7, மற்றும் 10[4][5]
இவ்வாறு உருவான படிகநீரேற்றுகள் சூடுபடுத்தினால் சிதைவடைகின்றன.[6]