இலந்தனம் பாசுபைடு
வார்ப்புரு:Chembox இலந்தனம் பாசுபைடு (Lanthanum phosphide) என்பது LaP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. இலந்தனமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இலந்தனத்தின் பாசுபைடு சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும்.[1][2][3]
தயாரிப்பு
இலந்தனம் உலோகத்தை மிகையளவு பாசுபரசுடன் சேர்த்து வெற்றிடத்தில் வினைபுரியச் செய்தால் இலந்தனம் பாசுபைடு உருவாகிறது:[4]
இயற்பியல் பண்புகள்
கனசதுர திட்டத்தில் Fm3m என்ற இடக்குழுவில் a = 0.601 நானோமீட்டர், Z = 4 என்ற அலகு அடையாளக்கூறுகளில் இலந்தனம் பாசுபைடு கருப்பு நிற படிகங்களாக உருவாகிறது.
நிலைப்புத்தன்மையற்ற இப்படிகங்கள் காற்றில் சிதைவடைகின்றன.
வேதிப் பண்புகள்
இலந்தனம் பாசுபைடு தண்ணீருடன் வினைபுரிந்து உயர் நச்சாகக் கருதப்படும் பாசுபீன் வாயுவை வெளியிடுகிறது.
பயன்கள்
உயர் ஆற்றல் நிலை, உயர் அலைவரிசை பயன்பாடுகள், சீரொளி மற்றும் இதர ஒளியியல் இருமுனையங்களில் இட்டெர்பியம் பாசுபைடு ஒரு குறைக்கடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.[1][5][6]
இலந்தனம் பல்பாசுப்பேட்டு
இலந்தனம் பாசுபைடுடன் கூடுதலாக இலந்தனம் மிகையளவு பாசுபரசுடன் வினைபுரிந்து LaP5[7] மற்றும் LaP7 போன்ற சேர்மங்களையும் கொடுக்கிறது.
மேற்கோள்கள்
வார்ப்புரு:இலந்தனம் சேர்மங்கள் வார்ப்புரு:பாசுபரசு சேர்மங்கள் வார்ப்புரு:பாசுபைடுகள்