இலித்தியம் ஆக்சலேட்டு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox இலித்தியம் ஆக்சலேட்டு (Lithium oxalate) என்பது C2Li2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியம் உலோகமும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது.[1][2] இலித்தியம் ஆக்சலேட்டு நீரில் கரையாது. சூடாக்கப்படும்போது ஆக்சைடாக மாற்றமடைகிறது.[3]

தயாரிப்பு

இலித்தியம் ஐதராக்சைடுடன் ஆக்சாலிக் அமிலத்தை நேரடியாகச் சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக இலித்தியம் ஆக்சலேட்டு தயாரிக்கப்படுகிறது.

𝟤𝖫𝗂𝖮𝖧+𝖧𝟤𝖢𝟤𝖮𝟦  𝖫𝗂𝟤𝖢𝟤𝖮𝟦+𝟤𝖧𝟤𝖮

பண்புகள்

a = 3.400, b = 5.156, c = 9.055 Å, β = 95.60°, Z = 4 என்ற அலகு அளவுருக்களுடன்[1] ஒற்றைச்சரிவு அமைப்பில் இலித்தியம் ஆக்சலேட்டு படிகமாகிறது. . சூடாக்கப்படும்போது இலித்தியம் ஆக்சலேட்டு சிதைவடைகிறது:

𝖫𝗂𝟤𝖢𝟤𝖮𝟦 410500oC 𝖫𝗂𝟤𝖢𝖮𝟥+𝖢𝖮

பயன்

வானவேடிக்கை வெடிகளில் சிவப்பு நிறச் சுவாலை தோன்றுவதற்கு இலித்தியம் ஆக்சலேட்டு பயன்படுத்தப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:இலித்தியம் சேர்மங்கள்