இலித்தியம் பாசுபைடு
இலித்தியம் பாசுபைடு (Lithium phosphide) என்பது Li3P என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பாசுபரசும் இலித்தியமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
ஆர்கான் வாயுச் சூழலில் சிவப்பு பாசுபரசையும் இலித்தியத்தையும் சேர்த்து சூடுபடுத்தினால் இலித்தியம் பாசுபைடு உருவாகிறது:[1]
மோனோலித்தியம் பாசுபைடுடன் இலித்தியத்தைச் சேர்த்தாலும் வினை நிகழ்ந்து இச்சேர்மம் கிடைக்கிறது.
இயற்பியல் பண்புகள்
இடக்குழு P63/mmc [2] மற்றும் a = 0.4264 நானோமீட்டர், c = 0.7579 நானோமீட்டர், Z = 2.[3][4] என்ற அலகு அளவுருக்களுடன் இலித்தியம் பாசுபைடு செம் பழுப்பு நிறத்தில் அறுகோணப் படிகத் திட்டத்தில் படிகமாகிறது.
வேதிப் பண்புகள்
இலித்தியம் பாசுபைடு தண்ணீருடன் வினைபுரிந்து பாசுபீனைக் கொடுக்கிறது::[5]
பயன்கள்
திட நிலை மின்கலன்களுக்கான சாத்தியமான மின்பகுளியாக இலித்தியம் பாசுபைடைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.[6]