இலித்தியம் லாக்டேட்டு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox இலித்தியம் லாக்டேட்டு (Lithium lactate) என்பது CH3CH(OH)COOLi[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். இலித்தியமும் லாக்டிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. படிக உருவமற்று உருவாகும் இவ்வுப்பு நீரில் நன்றாக கரையும்.[2]

தயாரிப்பு

லாக்டிக் அமிலத்தையும் இலித்தியம் ஐதராக்சைடையும் சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்தினால் இலித்தியம் லாக்டேட்டு உருவாகிறது.

LiOH+CHA3CH(OH)COOHCHA3CH(OH)COOLi+HA2O

இயற்பியல் பண்புகள்

படிக உருவமற்ற திண்ம உருவில் இலித்தியம் லாக்டேட்டு காணப்படுகிறது. தண்ணீரிலும் கரிமக் கரைப்பான்களிலும் நன்றாக கரையும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.[3] and organic solvents.

ஒளியியல் மாற்றியப் பண்பை விளக்குகிறது.

சூடுபடுத்தினால் சிதைவடைந்து காரப்பண்பு கொண்ட புகையை வெளியிடுகிறது.[4]

பயன்

உடலில் இருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்ற ஊக்குவிக்கும் மருந்துகளின் ஒரு பகுதியாக இலித்தியம் லாக்டேட்டு பயன்படுகிறது. உளவியல் நோய்களுக்கெதிரான மருந்துகளிலும் இது பயன்படுகிறது.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வார்ப்புரு:இலித்தியம் சேர்மங்கள்